சு. தியடோர் பாஸ்கரன் பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்' நாவலை வரலாற்று ஆய்வு வளங்கள் மற்றும் கள அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்கிறார்.
மாதொருபாகன் விவகாரம் - சுருக்கம்

பெருமாள்முருகன் எழுதிய 'மாதொருபாகன்' நாவல் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. 2013இல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு (One Part Woman) வந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த வாசகக் கவனம் பெற்ற இந்த நாவலுக்கு 2014ஆம் ஆண்டு இறுதியில் பெரும் எதிர்ப்பு உருவாயிற்று. நாவலைத் தடைசெய்யுமாறு கோரியும் நூலை எரித்தும் சாதி மத அடிப்படைவாதிகள் திட்டமிட்டுக் கலவரம் செய்தனர்.
அப்பிரச்சினையின் காரணமாக ‘எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான்’ என அறிக்கை வெளியிட்ட பெருமாள்முருகன் பொதுவெளியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள் உள்ளிட்டோர் போராட்டம், அறிக்கைகள், கட்டுரைகள், பதிவுகள் எனப் பலவகையில் மாதொருபாகன் நாவலுக்கு ஆதரவாக நின்றனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துரிமைக்கு ஆதரவாக 2016, ஜூலை 5 அன்று தீர்ப்பு வழங்கியது.
இப்பின்னணி கொண்ட 'மாதொருபாகன்' நாவல் தொடர்பான அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து வழங்க முயலும் பொதுத்தளம் இது.
ஆசிரியர் பற்றி — பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் (பி. 1966) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிறந்த தமிழ் எழுத்தாளர். ஆர். சண்முகசுந்தரம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகவும், நாமக்கல் அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி 2022இல் ஓய்வு பெற்றார்.
இளமுருகு என்ற பெயரிலும் எழுதியுள்ளார். "காலச்சுவடு", "மனஓசை", "குதிரை வீரன் பயணம்" போன்ற இதழ்களில் பணியாற்றியவர். அவரது "மாதொருபாகன்", "பூனாச்சி" உள்ளிட்ட நாவல்கள் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2023இல் "பூக்குழி" (Pyre) பன்னாட்டு புக்கர் விருது நெடும்பட்டியலில் இடம் பெற்றது; "ஆளண்டாப்பட்சி" (Fire Bird) ஜேசிபி இலக்கிய விருதை வென்றது.

கட்டுரைகள்
மேலும் பார்க்க →சுதீர் செந்தில் 'மாதொருபாகன்' விவாதத்தை அதிகாரம், தணிக்கை மற்றும் எழுத்தாளரின் நிலை ஆகிய கோணங்களில் பகுப்பாய்வு செய்கிறார்.
சுப்பிரமணி இரமேஷ் 'மாதொருபாகன்' நாவலின் சமூக, பாலின மற்றும் வாசிப்பு அரசியலை ஆய்வுக் கண்ணோட்டத்தில் விரிவாக ஆராய்கிறார்.
ச. தமிழ்ச்செல்வன் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மையமாகக் கொண்டு 'மாதொருபாகன்' வழக்கின் சட்டப் பயணத்தையும் இயக்கத்தின் வெற்றியையும் பதிவு செய்கிறார்.
மேற்கோள்கள்
“உறவுக்குள் அடங்கியுள்ள வேட்கை, விருப்பம், இழப்பு, நிறைவு ஆகிய பல்வேறு படிநிலைகளை பெருமாள் முருகன் மிகுந்த நுண்ணுணர்வுடன், கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.”
“ஒருவர் மீது ஒருவர் ஆழமாக அன்பு செலுத்தும், ஒரு குழந்தைக்காக ஏங்கும் இளம் தம்பதியின் மிக எளிய கதையை பாரம்பரியம், கடமை, இறுதியாக மன உறுதி ஆகிய நுண்ணிய உணர்வுகளுடன் இழைத்திருக்கிறார் முருகன். நம்மை ஆட்கொள்ளும் கதை…”
“உறவுகளைப் பற்றிய முருகனின் உள்நோக்கு இந்நூல் முழுவதும் மின்னல் கீற்றுகளாய் தெறித்துக் கொண்டே இருக்கின்றன.”
தொடர்புக்கு
கேள்விகள், கருத்துகள் அல்லது வாசிப்பு அனுபவத்தைப் பகிர இங்கே உள்ள படிவத்தைப் பயன்படுத்தவும்.


