மாதொருபாகன் நாவலும் காமாலைக்கண் பார்வைகளும்
ஆசிரியர்: ராஜன் குறை
மாதொருபாகன் நாவலும் காமாலைக்கண் பார்வைகளும் ராஜன்குறை பொதுவாகவே உரையாடல்களில் ஈடுபடும்போது பிறரை என் கருத்துக்களை குறித்து சிந்திக்க வைக்கவேண்டும் என்றுதான் விரும்புவேன்; பிறரை எப்படியாவது ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் என்றோ, காயப்படுத்தவேண்டுமென்றோ நினைக்கமாட்டேன். பிறகு, அடுத்தவர் செய்யும் தவறை நானே செய்யக்கூடியவன் என்பதையும் எனக்கு நானே கூறிக்கொள்வேன். சார்பற்ற நடுநிலைகள், உண்மைகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது என்பதால் எனக்கு படுவதை சொல்கிறேன், எடுப்பதை எடுத்துக்கொண்டு விடுவதை விட்டுவிடுங்கள் என்ற அணுகுமுறையே முக்கியம் என்று நினைப்பவன். அதைவிட முக்கியமாக உள்நோக்கம், சதிச்செயல்கள், இன்னார் இன்னாரால் தூண்டிவிடப்பட்டு பேசுகிறார் என்பது போன்றெல்லாம் சிந்திப்பதை, எழுதுவதை என் சுயமரியாதைக்கு இழுக்கு என திடமாக நம்புபவன். கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்ள விரும்புபவன். எனவே சிவராமனுக்கு பதில் எழுதுவது என்று முடிவு செய்துவிட்டேன். மாதொருபாகன் பிரச்சினையில் எனக்கு ஏற்பட்டுள்ள கலாசார அதிர்ச்சி தீவிரமானது. ஏனெனில், ஒரு நாவலை தடை செய்யவும், மாதொருபாகன்: ஸ்177 நாவலாசிரியனை கைது செய்யவும் கோரிக்கை எழும்போது சுதந்திரவாத மக்களாட்சி விழுமியங்களில் நம்பிக்கையுள்ள யாரும் அந்த கோரிக்கைக்கு எதிராக குரல் கொடுப்பதே முதல் கடமை. நாவல் நல்ல நாவலா, கெட்ட நாவலா, அதில் வரலாற்று திரிபு இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். நாவலில் குறைபாடு இருந்தால் அதற்காக அதை தடை செய்து, நாவலாசிரியனை கைது செய்யலாமா? அந்த நாவலை எரிக்கலாமா? இத்தகைய கோரிக்கைகளின் உள்ளார்ந்த பாசிசத்தன்மையை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் எப்படி நம்மால் மக்காளாட்சியை காப்பாற்ற முடியும் என்பதே மிக முக்கியமான கேள்வி. லீனா மணிமேகலையின் கவிதை நூலுக்கு இதே போல தடை கேட்டும், அவரை கைது செய்யக்கோரியும் ஒரு அமைப்பு புகார் கொடுத்தபோது அதை கண்டித்து நிகழ்ந்த கூட்டத்தை பற்றி சொன்னேன். அப்போது அரங்க வாசலில் என்னிடம் ஒரு இளம் தோழர் லீனாவின் கவிதைகளை விமர்சிப்பவர்கள் அந்த கூட்டத்திற்கு வருவார்களா என்பது போல கேட்டார். நான் சொன்னேன் இந்த கூட்டம் தடைக்கும், கைதிற்கும் எதிரான கூட்டம்தானே தவிர அவர் கவிதைகளுக்கான பாராட்டு கூட்டமென்றால் ஒருவேளை அவர் மட்டும்தான் அரங்கத்தில் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று. பொதுவாக நான் 1988 இரண்டாவது குற்றாலம் கவிதைப்பட்டறைக்குப் பிறகு கவிதை விமர்சனத்தில் ஈடுபடுவதில்லை, அதிகம் கவிதைகளும் படிப்பதில்லை என்பதால் எனக்கு அவர் கவிதைகளைப் பற்றி கருத்துக்கூற முழுத்தகுதி இல்லை. இருந்தாலும் ஏன் அப்படி விளையாட்டாக சொன்னேன் என்றால் எழுத்துரிமை பாதுகாப்பிற்கும், எழுத்தின் தரம் பற்றிய விவாதங்களுக்கும் முடிச்சு போடக்கூடாது என்பதற்காகத்தான். என்னை மிக, மிக நிதானமாக பேசுவதற்காக பாராட்டும் சிவராமன் முதலில் பெருமாள் முருகனுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள இந்த போலீஸ் கம்ப்ளெய்ண்ட் என்னும் கோரிக்கையை கண்டிக்கிறாரா இல்லையா என்பதை பதிவு செய்யவேண்டும். கண்டிக்கவில்லை என்றால் குறைந்தபட்ச மக்களாட்சி விழுமியத்தில் கூட அவருக்கு நம்பிக்கையில்லை என்பதாகவே அர்த்தமாகும். கண்டிக்கிறார் என்றார் அதை தெளிவாக முதலில் கூறவேண்டும். சிவராமனின் வாதங்களை ஆழமாகப் படிக்கும்போது எனக்கு ஏற்படும் குழப்பம் என்னவென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ். திருச்செங்கோடு அமைப்பு எதிர்ப்பில் சம்பந்தப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதுதான். ஆங்கில ஹிண்டு நாளிதழ் அரசியல் சார்புடன் இயங்குகிறது என்று கொண்டாலும் சம்பந்தப்பட்ட பிரசிடெண்ட் மகாலிங்கம் இந்துவுக்கு மறுப்பை தெரிவிக்கவில்லையே? ளினீதீuபீsனீணீஸீ, ஸிமீணீபீமீக்ஷீ’s ணிபீவீtஷீக்ஷீ எல்லாம் வைத்துக்கொண்டு இயங்கும் ஹிந்து நாளிதழ் கற்பிதமாக ஒரு மனிதரை இப்படி தொடர்பு படுத்தி எழுத வாய்ப்பேயில்லை. இந்த பிரச்சினைக்கு தொடர்பில்லாமல் எதையெதையோ எழுதி சிவராமன் மழுப்பும் புத்திசாலித்தனம் வேதனையையே தருகிறது. இரண்டாவது முக்கிய கேள்வி, அவர் காலச்சுவடு இந்த எதிர்ப்பை பயன்படுத்தி புகழ்பெறுவதால் நாவலை எதிர்க்கிறாரா, அல்லது நாவலின் உள்ளடக்கம், அதற்காக பெறப்பட்ட நல்கை ஆகியவற்றிற்காக நாவலை எதிர்க்கிறாரா என்பது. அப்படியே அவர் நாவலின் உள்ளடக்கத்தில் குறை கண்டாலும், காலச்சுவடு இந்த எதிர்ப்பை அவர்கள் புகழை வளர்க்க பயன்படுத்தினாலும் ஒரு புதினத்தை தடை செய்வது, ஆசிரியரை கைது செய்வது போன்ற கோரிக்கைகளை கண்டிக்கிறாரா இல்லையா என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இல்லை நாவலில் ஊரின் பேர் போட்டுவிட்டார், காலச்சுவடு இந்த எதிர்ப்பை ஊதிப்பெருக்கி புகழ் தேடுகிறது அதனால் நாவலை தடைசெய்து, பெருமாள் முருகனை கைது செய்வதை ஆதரிக்கிறாரா என்று தெரியவில்லை. பெருமாள் முருகன் மீது சட்டரீதியான நடவடிக்கை கூடாது என்று சொல்கிறார் என்கிற பட்சத்தில். அந்த கோரிக்கையை தெளிவாக கண்டிக்கிறார் என்கிற பட்சத்தில் நாம் அவர் கூறும் மற்ற சில பிரச்சினைகளை பரிசீலிக்கலாம். அவரது பிரச்சினைகளை இரண்டு புள்ளிகளில் தொகுத்துக்கொள்ள விரும்புகிறேன். ஒன்று பெருமாள் முருகன் ஆய்வு, அதற்கான நல்கை, நாவலின் உள்ளடக்கம் போன்றவை. இரண்டு, அந்த நாவலை பதிப்பித்த காலச்சுவடு பதிப்பகம் தொடர்பான கேள்விகள். இந்த இரண்டு புள்ளிகளை குறித்தும் அவர் எழுப்பும் கேள்விகளை அப்படியே படிப்பதற்கு அவற்றின் முதிர்ச்சியின்மை காரணமாக எனக்கு கூச்சமாக இருக்கிறது. எனவே பொதுவாக இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும் என்னுடைய எண்ணங்களை, சிந்தனைகளை பதிவு செய்ய விரும்புகிறேன். ஆய்வு நல்கைகள், நிறுவனங்கள் குறித்த பாமரத்தனமான கற்பனைகள் மீண்டும் மீண்டும் தமிழில் புழங்கி வருவதை சகிக்க முடியவில்லை. நல்கை பிரச்சினை பெங்களூரில் இயங்கி வரும் மிஸீபீவீணீஸீ திஷீuஸீபீணீtவீஷீஸீ ஷீயீ கிக்ஷீts மாதொருபாகன்: ஸ்179 எழுத்தாளர்களுக்கு நிக்ஷீணீஸீt எனப்படும் நல்கையை அறிவித்த பிறகு தமிழ் எழுத்தாளர்கள் சிலர் அத்தகைய உதவி பெற்றிருக்கிறார்கள். பூமணி அவர்கள் சிவகாசி கலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய இதே நல்கையை பெற்றார். அஞ்ஞாடி நாவலில் அதை புதினமாக வரைந்துள்ளார். பொதுவாக இத்தகைய நல்கைக்கும், அதில் செய்யப்படும் ஆய்வு, அதனடிப்படையில் நிகழும் புனைவெழுத்து ஆகியவற்றிற்கு பெரிய தொடர்பு எதுவும் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் மரியாதை நிமித்தமாக அதன் பிறகு வெளிவரும் நூல் ஒன்றில் அந்த நல்கை ஏதோவொரு வகையில் உதவியது என்று குறிப்பிடுவது வழக்கம். கல்விப்புலத்தில்கூட நல்கைகளுக்கு தொடர்புடைய எந்த நிபந்தனையும் கிடையாது. தமிழ் திரைப்படம் குறித்து ஆய்வு செய்ய நான் நல்கை பெற்றேன். ஆனால் இறுதியில் நான் பொம்மலாட்ட கலைஞர்கள் குறித்து ஆய்வேட்டை சமர்ப்பித்தால் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் அந்த ஆய்வேட்டின் முன்னுரையில் மேற்படி நல்கை எனக்கு உதவியது என்று குறிப்பிடுவது நாகரீகம்; ஒருவகை அவசியம். அந்த நல்கை தரும் நிறுவனத்திற்கு ஆய்வின் காலகட்டத்தின் முடிவில் நான் அந்த நல்கையின் உதவியுடன் இங்கிங்கெல்லாம் சென்றேன், இந்திந்த விஷயங்களை ஆராய்ந்தேன் என்று ஒரு இரண்டு பக்கம் எழுதி அனுப்பவேண்டும் அவ்வளவே. ஆய்வின் முடிவுகளையோ, தரவுகளையோ யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. கல்விப்புல ஆய்விற்கு அவ்வளவுதான் என்னும்போது, புனைவெழுத்தாளர்கள் சம்பிரதாயமாக இங்கெல்லாம் சென்றோம், இதெல்லாம் செய்தோம் என்று சொன்னால் போதுமானது. மேலும் ஆய்வு நல்கை பெருவதற்கும், ஆய்வாளரின் நிதிநிலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் கோடீசுவரனாக இருக்கலாம். இருந்தாலும் ஆய்விற்காக நல்கை பெறும் உரிமை எனக்கு உண்டு. உன்னிடம் பணம் இருக்கிறதே, உனக்குத் தரமாட்டோம் என்று எந்த நிறுவனமும் சொல்ல முடியாது, ஏனெனில் ஆய்விற்காக சொந்த பணத்தை செலவு செய்யச்சொல்ல அந்த நிறுவனங்களுக்கு உரிமை கிடையாது. பொதுவாக சுதந்திரவாத நாகரீகத்திற்கு கட்டுப்படுபவர்கள் அடுத்தவர்களின் வருமானம் குறித்தெல்லாம் பேசமாட்டாரகள். அந்த அளவிற்கு தரம் தாழும் நிலை நண்பர்களுக்கு ஏன் வருகிறது என்று புரியவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் பிற எழுத்தாளர்களை நல்கை பெருவதிலிருந்து தடுத்துவிடக்கூடாது என்பதே என் கவலை. மிதிகி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர்களாக நான் இதுவரை சந்தித்தவர்கள் எல்லோருமே கூரிய மதியும், உயர் ஒழுக்கமும், தார்மீக சிந்தனையும் உடையவர்கள். இந்த நிறுவனத்துடன் உறவு கொள்வது பெருமைக்குரிய செயலே அன்றி சிறுமையல்ல என்பதை தெளிவாகக் கூற விரும்புகிறேன். திருவிழா பிரச்சினை அடுத்த பிரச்சினை தேர்த்திருவிழாக்களில் இவ்விதமான திருமண பந்தத்திற்கு புறம்பான பாலியல் உறவுகள் நிகழும் பண்பாட்டு அம்சம் தமிழகத்தில் இருந்ததா, இல்லையா என்று. நான் என்னுடைய அனுபவ பதிவிலிருந்து மிகவும் திட்டவட்டமாக எழுபதுகளின் துவக்கம் வரை இத்தகைய நடைமுறை பல ஊர்களில் இருந்தது என்று உறுதியாகக் கூறுகிறேன். உடனே ஊர் பெயரை கேட்கிறார். நான் சொன்னால் யாராவது நாலைந்து சிறுவர்கள் எங்கள் ஊரை எப்படி கேவலப்படுத்தலாம் என்று வந்து குதிப்பார்கள். சிவராமன் அந்த ஊர்க்காரர்களில் யார் தகவல் கொடுத்தது பேரைச்சொல்லுங்கள் என்பார். உண்மையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சொன்னவரின் பெயர், விலாசம் எல்லாம் கேட்பார். இப்படியான ஆதாரங்களை தரும் வழக்கம் பொதுவாக மானுடவியல் பயிற்சியிலோ, வாய்மொழி வரலாற்றுத்துறையிலோ கிடையாது. எங்கள் அனுபவ, ஆய்வு பதிவுகளிலிருந்து பெறும் விளக்கங்களை சொல்வோமே தவிர யார் என்ன என்று சொல்வதும், சம்பவம் நிகழ்ந்ததை போட்டோ பிடித்து தருவதும் எங்கள் வேலையில்லை. வரலாற்று எழுதியலில் சாட்சிபூர்வ வராற்று எழுதியல் (எவிடென்ஷியல் ஹிஸ்டோரியோகிராஃபி) என்பது பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில் தொடங்கியது. பொதுவாக நேர்காட்சிவாத அறிவியலின் தாக்கத்தால் சான்றுகள், நிரூபணங்கள் ஆகியவற்றின் மேலாதிக்கம் அதிகமாகியதால் வாய்மொழி வரலாறுகளை கொண்ட சமூகங்கள் எல்லாம் வரலாரற்ற மக்கள்தொகுதிகளை கொண்டதாகவே அறியப்பட்டது (ஜீமீஷீஜீறீமீ ஷ்வீtலீஷீut லீவீstஷீக்ஷீஹ்). இது ஐரோப்பிய மையவாதத்திற்கும், இன மேலாதிக்கத்திற்கும் வழி வகுத்தது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகான மேலைக் கல்வி நிறுவனங்களில் ஏற்பட்ட சுயவிமர்சன பார்வைகளால் மானுடவியல், வாய்மொழி வரலாற்றியல், நாட்டார் வழக்காற்றியல் போன்றவை மிகுந்த முக்கியத்துவம் அடைந்தன. அடித்தட்டு மக்கள் வரலாறு போன்றவை தோன்ற காரணமாயின. நண்பர் சுந்தர் காளி வாய்மொழி வரலாற்று சர்வதேச கருத்தரங்கத்தில் பங்கேற்று வெள்ளைக்காரச்சாமி பற்றிய வாய்மொழி மரபுகளை குறித்து பேசியுள்ளார். மாதொருபாகன்: ஸ்181 பாலியல் நடவடிக்கைகள் தொடர்பான வாய்மொழி மரபுகள் நம் சமூகத்தை புரிந்துகொள்ள இன்றியமையாதவை. திருவிழா காலத்து நெகிழ்வுகள் பல விதமான அடிப்படைகளில் அமைந்தவை. எல்லா ஊருக்கும், சமூகங்களுக்கும் பொதுவான நடைமுறைகளைக் கொண்டதாக பார்க்க முடியாது. ஆனால் பொதுவாக ஏதோவிதமான நெகிழ்வும், களியாட்டமும் அனுமதிக்கப்பட்டதை பரவலாக மக்களுடன் பேசி அறியமுடியும். குறிப்பாக ஒரு ஊரில் துப்பட்டி திருவிழா என்று குறிப்பிடுவதை குறித்து நான் நிறைய பேரிடம் பேசியிருக்கிறேன். அந்த ஊரைச்சேர்ந்தவர்களே அதை பெருமையாகச் சொல்லிக்கொள்வதுதான் என் அனுபவத்தில் நான் கண்ட முக்கியமான அம்சம். ஒரு ஊரில், ஒரு சமூகத்தில் இப்படி நடந்தது என்றால் உடனே அந்த ஊரைச்சேர்ந்த எல்லா பெண்களுக்கும், ஆணகளுக்கும் இழிவு என்று நினைக்கும் பழக்கம் மக்களிடம் கிடையாது. யாரோ சிலர் இப்படி செய்வார்கள் என்றுதான் கொள்ளப்படும். அந்த யாரோவின் குறிப்பின்மை தரும் பாதுகாப்பில்தான் எல்லோருமே செயல்பட முடியும். எனவே பேச்சுவழக்கில் அந்த யாரோக்களை பற்றி எல்லாருமே உற்சாகமாகப் பேசுவார்கள். குறியயக்க ரீதியாக இங்கே ஊர், சமூகம் என்ற தொடர்மம் (வீஸீபீமீஜ்), யாரோ என்ற மயக்கப் (ஸிலீமீனீமீ) புரிவானின் (வீஸீtமீக்ஷீஜீக்ஷீமீtணீஸீt) ஆதிக்கத்தில் இருப்பதால் யாரும் இதனால் புண்படுவதில்லை. ஆனால் ஒரு பித்த நிலையில் (ஜீணீக்ஷீணீஸீஷீவீபீ) நவீன அடையாள வாதம் ஒரு ஊர்ப்பெயர் அந்த ஊரிலுள்ள அனைவரையும் குறிக்கிறது என்று அர்த்தப்படுத்துவது பெரும் விபரீதமும், வக்கிரமும் ஆகும். தான் செய்வது என்ன என்று அறியாமலேயே சிவராமன் இதைச்செய்கிறார். வாதத்தில் வெல்வதற்காக விழுமியங்களை இழந்துவிடக்கூடாது என்று அவரைக் கேட்டுக்கொள்கிறேன். கோயில்களும் திருவிழாக்களும் குறிப்பிட்ட ஒரு சில ஜாதியினர் அதிகம் பங்கேற்பதாகத்தான் இருக்கும் என்பதால் இந்த பாலியல் நெகிழ்வுக்கும் ஜாதி கடந்த உறவுகளுக்கும் உடனடியாக தொடர்பிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் திருவிழா என்றில்லாமல் பொதுவாக ஜாதி கடந்த உறவுகள் குறித்த வாய்மொழிக்கதைகள் இல்லாத ஊர்களே இருக்க முடியாது என்றும் சொல்லலாம். அது வேறு கதை. இந்த கதைகளில் எல்லாம் ஆண்மைய வாதம், பெண் சுதந்திரம் இரண்டும் சிக்கலான விகிதங்களில் கலந்திருக்கும். வாய்மொழிக் கதைகளை முற்றிலும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் கூடாது, அப்படியே புறந்தள்ளவும் கூடாது. இதில் ணீக்ஷீநீலீமீtஹ்ஜீமீ என்ன, பிரதிமம் என்ன, தொடர்மம் என்ன என்பதையெல்லாம் நுட்பமாக பரிசீலித்துதான் எந்த அளவு இந்தக் கதைகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை முடிவு செய்யவேண்டும். தொடர்ந்து ஆய்வு அனுபவம் கொடுக்கும் முதிர்ச்சியில் இதெல்லாம் மெல்ல, மெல்ல சாத்தியப்படும். பதிப்பக பிரச்சினை பொதுவாகவே தமிழகத்தில் என்னுடன் பழகும் பல நண்பர்கள் கூட, தாங்கள் அறியாத விஷயங்களைப் பற்றி சுலபத்தில் கற்பிதங்களில் மூழ்கும் தன்மையில்தான் இருக்கிறார்கள். தீர விசாரித்து அறிவது என்பதை விட, கற்பிதம் செய்து பேசுவது பலவீனமான மன அமைப்புகளுக்கு இதமாக இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, அ.மார்க்ஸ் சில ஆண்டுகளுக்கு முன் அதாவது முள்ளிவாய்க்காலுக்கு பிறகு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகை துறையைச் சார்ந்த ஒரு நண்பர் அவருக்கு இலங்கை அரசின் புரிதல் இல்லாமல் எப்படி விசா கிடைக்கும், அவர் புலிகளை எதிர்த்து எழுதுவதற்கான பரிசுதானே அது என்றெல்லாம் கேட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார். எனக்கு சிரிப்பாக இருந்தது. போர் உக்கிரமாக நடந்தகொண்டிருந்தபோதே இலங்கைக்கும், யாழ்பாணத்திற்கும் எத்தனையோ பேர் விசா பெற்றுக்கொண்டு சென்றனர்; வந்தனர். பலர் ரகசியமாக புலிகளுடன் தொடர்பும் கொண்டனர். ஒரு சில மனித உரிமை அமைப்புகள், செல்வாக்கான பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும், அவர்கள் பரிந்துரை செய்பவர்களுக்கும் பயண அனுமதி கிடைக்கத்தான் செய்யும். கொழும்பில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் முக்கியமான வர்த்தக நிறுவனங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருந்தார்கள். எந்த அமைப்பு ஸ்பான்சார் செய்தால் விசா கிடைக்கும் என்பதற்கெல்லாம் பல நுட்பமான காரணங்கள் உண்டு. எல்லாமே அரசிற்கு ஒத்துழைப்பதோ, ஒற்றுவேலை பார்ப்பதோ கிடையாது. முரண்களின் சமரசம் என்ற அளவில் அரசாங்கங்கள் சில நடைமுறைகளை கடைபிடிக்கத்தான் வேண்டும். ஏதோ ராஜபக்சேவுடன் நேரடியாக ஒப்பந்தம் போட்டால்தான் இலங்கை செல்லமுடியும் என்று கிடையாது. இதைப்போன்ற மிகைப்படுத்தப்பட்ட எளிமையான மனப்பதிவுகளுடன் பலரும் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. காலச்சுவடு பதிப்பகம் மற்றும் பத்திரிகைக்கு எதிராக தமிழகத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அதாவது அவர்கள் தமிழ்-இனி மாநாட்டை பிரம்மாண்டமாக சென்னையில் மாதொருபாகன்: ஸ்183 நடத்திய பிறகு உருவாகியிருக்கும் மனப்பதிவுகள், சாய்வுகள், விசாரணையற்ற காழ்ப்புணர்வுகள் போன்றவை இன்று விபரீதமான பரிமாணத்தை எட்டியுள்ளதாக உணர்கிறேன். நான் சிறுபத்திரிகை வட்டத்திற்கு அறிமுகமான 1982-ஆம் ஆண்டில் ஆறு மாத காலம் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை வாசித்தபடியே இருந்தேன். என் மீது மிகப்பெரிய தாக்கத்தை செலுத்திய நாவல் அது. இப்போதும் பல வரிகள் மனப்பாடம். சு.ராவை 1983,85,86 ஆகிய ஆண்டுகளில் கருத்தரங்கங்களில் பார்த்துப்பழகும் சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. அவர்மீது மிகுந்த அபிமானம் கொண்டவனாகவே இருந்தேன். பார்ப்பன குடும்பத்தில் பிறந்த எனக்குள் சுயஜாதி விமர்சனம் கடுமையாக மேலோங்கியபோது க.நா.சு, சு.ரா போன்றவர்களெல்லாம் ஏன் என்னைப்போல் உணரவில்லை என்ற எண்ணம் அதிகமாகியது. தத்துவ அளவிலும் அவர்கள் போதிய அளவு தீவிரம் கொள்ளவில்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது. அதனால் அவர்கள் எழுத்துக்களை கொஞ்சம் கடுமையாகவே விமர்சிக்கும் நிலைக்கும் மன விலக்கத்திற்கும் ஆளாகி இருந்தேன். ஆனாலும் சு.ரா வெளியிட்ட காலச்சுவட்டிற்கு சந்தா சேர்த்து அனுப்பினேன். கந்தையா சண்முகலிங்கம் என்பவர் எழுதிய கிராம்சி குறித்த கட்டுரை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதன் பின்னரே ஆங்கிலத்தில் கிராம்சியை வாசிக்க ஆரம்பித்தேன். நான் நிறப்பிரிகை பத்திரிகையுடன் நெருக்கமாக இருந்தபோது அதை காலச்சுவடிற்கு மாற்று, எதிர் என்றெல்லாம் பார்க்கவில்லை. உண்மையில் நான் பிரக்ஞை, படிகள், பரிமாணம், நிகழ், நிறப்பிரிகை முதலியவையும் கசடதபற, ழ, மீட்சி, கொல்லிப்பாவை, காலச்சுவடு ஆகியவையும் ஒரே விதமான சமூகச் சூழலில் தோன்றுபவை (sஷீநீவீணீறீ னீவீறீவீமீu) வாசிக்கப்படுபவை என்றுதான் நம்பினேன். பொதுவான மத்தியதர வர்க்க, கீழ் மத்தியதரவர்க்க சமூக, அரசியல் விழைவுகளுக்கான களங்கள் என்றுதான் எண்ணினேன். பாசிச, கும்பல் கலாசார போக்குகளுக்கு மாற்றாக ஒரு சுதந்திரவாத-இடதுசாரி கூட்டணிக்கான களம் சிறுபத்திரிகை என்றே நம்பினேன். எண்பத்தி இரண்டாம் ஆண்டு இலக்கு என்ற கலாசார அமைப்பின் நோக்கமாக ஏறக்குறைய இதே போன்ற கருத்தை தமிழவன் எழுதியிருந்தார் என்பது என் நினைவு. பின்னாளில் எனக்கு ஏற்பட்ட இன்னொரு பிரத்யேக சிக்கல் கும்பல் கலாசாரத்தையும் (னீணீss நீuறீtuக்ஷீமீ), வெகுஜன கலாசாரத்தையும் (ஜீஷீஜீuறீணீக்ஷீ நீuறீtuக்ஷீமீ) வேறுபடுத்தி பார்க்கவேண்டும் என்ற நிலைபாடு. அங்கேதான் தமிழ் சினிமா, திராவிட இயக்கம் சார்ந்த அக்கறைகள் அதிக முனைப்பு கொண்டன. மதுரை நண்பர்களின் உறவு இதற்கு உரம் சேர்ப்பதாக இருந்தது. சர்வதேச அளவில் இது கல்சர் ஸ்டடீஸ், சபால்டர்ன் ஸ்டடீஸ் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. பிற சிறுபத்திரிகை நண்பர்கள் பலருக்கும் எனக்கும் இந்த இடத்தில் முட்டிக்கொள்ளும். பெருந்தேவியும் இப்போது இந்த சிக்கலில் என்னுடன் பங்குகொள்கிறார் என்பதை பார்க்க முடிகிறது. கண்ணனின் தனி வழி பிரச்சினை ஆனால் கண்ணன் பொறுப்பேற்று காலச்சுவடு தொடங்கிய பிறகு, குறிப்பாக தமிழ்-இனி மாநாட்டிற்கு பிறகு அவர் முக்கியமான ஒரு மாறுதலை கொண்டுவந்தார். காலச்சுவட்டை ஒரு நிறுவனமாக்கினார். இலக்கியம் என்பது வர்த்தகத்துடன் இணைந்து வாழமுடியும் என்று நிரூபித்தார். பத்திரிகையும் சரி, பதிப்பகமும் சரி ஒரு தொழில்முறை அமைப்பாக, நிறுவனமாக தோற்றம் கொண்டதுடன் இலக்கியவாதிகள் செயற்கரியதாக கருதும் விஷயங்கள் பலவற்றை அநாயசமாக செய்யவும் தொடங்கினார். செம்பதிப்புகள், பிரம்மாண்டமான மொழிபெயர்ப்புகள், வைப்பு நிதி திட்டம், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தொடர்புகள் என அதுவரை சிறுபத்திரிகை சூழலுக்கு தொடர்பில்லாத ஒரு புதிய விஷயத்தை அதே இலக்கிய, அரசியல் விழைவுகளை கைவிடாமல் செய்யத் தொடங்கினார். தொன்னூறுகளுக்குப்பின் தோன்றி விரிவடைந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகள் மிகவும் சாதகமாக அமைந்தன. காலச்சுவட்டிற்கு இணையாக உயிர்மை, தமிழினி, விடியல் போன்ற பல பதிப்பகங்கள் முக்கியமான நூல்களை வெளியிடத்தான் செய்தன. ஆனால் காலச்சுவடு மிக வித்தியாசமான ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்டது. அதில் ஒரு தனிநபர் சாரா குணாதிசயமொன்று (வீனீஜீமீக்ஷீsஷீஸீணீறீ) உருவாகத்தொடங்கியது. ஆனாலும் கண்ணனின் தலையங்கங்கள் பல சமயம் பழைய குழு மனப்பான்மையை உயிர்பிப்பதாகவும் காலச்சுவடை விமர்சிப்பவர்களை கடுமையாக சாடுவதாகவும் அமைந்தது அந்த இம்பர்சனல் தன்மையின் பரிமாண வளர்ச்சியை தடுப்பவையாக அமைந்தன. காலச்சுவட்டின் இந்த புதிய பாதை அதைப்பற்றிய மூன்றுவிதமான கற்பிதங்கள் தோன்ற காரணமாக அமைந்ததாக யூகிக்கிறேன். நான் இந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வசித்தது ஒரு சில ஆண்டுகள் மட்டுமே என்பதுடன் தொடர்ந்து எந்தப்பத்திரிகையையுமே படிக்கவும் வாய்ப்பும், அவகாசமும் இல்லை என்பதே உண்மை. எனவே என் கணிப்புகளை யூகங்களாக மட்டுமே வெளியிட முடியும். 1) முதல் கற்பிதம் காலச்சுவடு சிறுபத்திரிகை விழுமியங்களுக்கு எதிரானது. தன் முரட்டு நிறுவன மாதொருபாகன்: ஸ்185 பலத்தால் அது சிறுபத்திரிகை சூழலின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிராக இருக்கிறது. 2) அது இடதுசாரி தன்மை கொண்டது இல்லை. அதனிடம் அரசிற்கு எதிரான, ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குரல்கள் தோன்ற வாய்ப்பில்லை; 3) அது பார்ப்பனீய தன்மை கொண்டது; தலித், முஸ்லிம், பெரியாரியம் ஆகியவற்றிற்கு எதிரானது. என்னுடைய பார்வையில் இந்த மூன்றையுமே நான் ஏற்க தயாராக இல்லை. வர்த்தக நிறுவனம் இலக்கியத்திற்கு எதிரானது: நான் என்றோ எஸ்.எஸ்.வாசன் செய்திருக்க வேண்டியதை காலச்சுவடு செய்திருப்பதாகத்தான் பார்க்கிறேன். அதாவது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு இலக்கியமும், கலைகளும் நிறுவனரீதியான அமைப்புகளால் வளர்க்கப்படுவது என்பது தவிர்க்கவியலாதது. பதிப்புத்துறை என்பது முதலீட்டிய களங்களுள் ஒன்று. அது எல்லா காலத்திலும் முறை சாரா பொருளாதாரமாக, குடிசைத்தொழிலாக, தியாகமாக மட்டுமே இருக்கவேண்டும் என்று சொல்வது பொருத்தமற்றது. காப்புரிமை போன்றவற்றை முற்றிலும் எதிர்ப்பது என்பது எப்படி சுதந்திரவாத ஜனநாயகத்தில் சாத்தியமாகும்? காப்புரிமை எனபது சட்டம் மட்டுமல்ல; அது முதலீட்டிய காலத்தின் தார்மீகமும் ஆகும். எனக்கு ஊதிய உயர்வு, டியர்னஸ் அலவன்ஸ், போனஸ் எல்லாம் வேண்டும் என்று போராடும்போது எழுத்தாளனுக்கு காப்புரிமை அவசியம் இல்லையா? காப்புரிமை சார்ந்த சில நூதமான பிரச்சினைகளில் நெகிழ்வுத்தன்மை கோருவது எனபது வேறு; வற்புறுத்தவது என்பது வேறு. புதுமைப்பித்தன் படைப்புகள் காப்புரிமை விஷயத்தில் முதன் முறையாக காலச்சுவட்டின்மீது பெரும் வெறுப்பு ஒன்று கட்டமைக்கப்பட்டது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலச்சுவடு போன்ற பத்து நிறுவனங்கள் தோன்றிய பிறகும், சிறுபத்திரிகை ஒன்று இருக்கத்தான் செய்யும்; அந்த பன்மைக்கான களங்களை நாம் பாதுகாப்பது வேறு. நிறுவன காழ்ப்பை வளர்ப்பது வேறு. காலச்சுவடு பதிப்பகத்தின் பங்களிப்பு தமிழ்மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதது. காலச்சுவடு பத்திரிகை வலதுசாரி, அரசு சார்புடையது: நான் “காலச்சுவடு பத்திரிகையும், இன்றைய அரசியல் சூழலும்” என்ற என் முகப்புத்தக குறிப்பில் வேளச்சேரி போலீஸ் என்கவுண்டர் குறித்து ஜெயமோகன் எழுதியது என்ன, துக்ளக் பத்திரிகை எழுதியது என்ன, ஆனந்த விகடன் எழுதியது என்ன என்பவற்றுடன் ஒப்பிட்டு காலச்சுவடுதிட்டவட்டமாக போலீஸ் மனித உரிமை மீறலை கண்டித்திருப்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். இதையெல்லாம் யாரும் படித்ததாகவே காட்டிக்கொள்வதில்லை. ஆனால் காலச்சுவடு என்னவோ இந்திய அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நேரடி முகவர் போல பேசுவதற்கு யாரும் தயங்குவதில்லை. என்னால் இந்த சூழலை புரிந்துகொள்ள முடியவில்லை. இப்படி ஒரு காழ்ப்பு சமூகத்தில் உருவாக முடியுமா என்று வியப்பாக இருக்கிறது. அருந்ததி ராயின் புரோக்கன் ரிபப்ளிக் நூலை தமிழில் வெளியிடுவதை விட வேறெப்படி ஒரு பதிப்பகம் சமூக அக்கறையுடன் செயல்படமுடியும்? ஆனால் என்ன வியப்பென்றால் அருந்ததி ராய் காலச்சுவடு பதிப்பகத்திற்கு அந்த நூலை தரக்கூடாது என்று பிரச்சாரம் நடந்தது. காரணம் தலித் எதிர்ப்பு. தொடர்ந்து தலித் எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை தன் ஆசிரியர் குழுவில் வைத்திருப்பதுடன் அவர்கள் படைப்புகளையும், கட்டுரைகளையும் இதழ் தவறாமல் வெளியிட்டு வரும் ஒரே பத்திரிகையை எப்படி கூசாமல் தலித் விரோத பத்திரிகை என்று சொல்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. ஏதோ ரிப் வான் விங்கிள் போல உணர்கிறேன். என்னாயிற்று எல்லோருக்கும்? அல்லது எனக்குதான் ஒன்றும் புரியமாட்டேன் என்கிறதா? காலச்சுவடு பார்ப்பனீய பத்திரிகை: உண்மையிலேயே எனக்கு மிகவும் அலுப்பூட்டும் பிரச்சினை இதுதான். காரணம் ஒரு புறம் நானும், தோழர் பெருந்தேவியும் பெரியார் இயக்கத்தை, திராவிட இயக்கத்தை சிறுமைப்படுத்துபவர்களுடன் முரண்பட்டு எங்கள் பார்ப்பன அடையாளத்தையும், அனுபவத்தையும் முன்வைத்து பேசுகிறோம். பார்ப்பனரல்லாதோர் அரசியலின் நியாயம், தலித் அரசியலின் நியாயம் இரண்டையும் வலியுறுத்துகிறோம். ஆனால் அசோகமித்திரன், காலச்சுவடு போன்ற நியாயமாக பாராட்டப்படவேண்டிய படைப்பாளிகள், நிறுவனங்களை பாராட்டினால் நாங்கள் பார்ப்பனீய சக்திகளாகிவிடுகிறோம். இந்த ரசவாதத்திலிருந்து தப்பிக்க எங்களுக்கு வழி தெரியவில்லை. காலச்சுவடு பதிப்பகத்தின் கிளை நிறுவனம் ஒன்று நூல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை வடிவமைக்கும் வேலையை செய்து வந்தது. அந்த நிறுவனம் பிராமின் டுடே என்ற பத்திரிகையை வடிவமைக்கும் செய்தி முகப்புத்தகத்தில் வெளியானபிறகு அந்த நிறுவனம் விடுதலை சிறுத்தைகளின் பத்திரிகையையும் வடிவமைக்கும் உண்மையை காலச்சுவடு சுட்டிக்காட்டியது. ஒரு வணிக நிறுவனம் என்ற அளவில் யார் வடிவமைக்க ஆர்டர் கொடுத்தாலும் அது செய்து தந்துகொண்டிருந்தது எனபது விளக்கப்பட்டது. இது எதுவுமே நடக்காதது போல மீண்டும் சிவராமன் பிராமின் டுடே பிரச்சினையை எழுப்பியிருப்பது மிகுந்த அயர்ச்சியை உண்டுபண்ணுகிறது. காலச்சுவடு பார்ப்பனீய பத்திரிகை என்பதை எந்த ஆதாரத்துடன் சொல்கிறார்கள் மாதொருபாகன்: ஸ்187 என்பதை நிறுவவேண்டும். பார்ப்பனர் நடத்தும் பத்திரிகை; ஆகவே பார்ப்பனீய பத்திரிகை என்று சொல்லமுடியுமா? அப்படியென்றால் விகடன், குமுதம், ஹிண்டு எல்லாம் பார்ப்பனீய பத்திரிகைகள்தான். தமிழகத்திற்கு பார்ப்பனீயத்தின் பங்களிப்பு நன்றாகத்தான் இருக்கிறது. காலச்சுவடிற்கும், தினமலருக்கும் ரகசிய உறவிருப்பதாக சொல்கிறார். காலச்சுவடு கூடங்குளம் போராட்டத்தை ஆதரிக்கிறது; தொடர்ந்து உதயகுமார் அதில் எழுதி வந்திருக்கிறார். தினமலர் கூடங்குளம் போராட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. நம் காலத்தின் மிக முக்கியமான பிரச்சினையில் நேர் எதிர் நிலையெடுக்கும் காலச்சுவட்டுடன் ரகசிய உறவு தினமலர் கொண்டால் அதனால் நமக்கென்ன நஷ்டம்? நமக்கு முக்கியம் காலச்சுவட்டின் நிலைபாடுதானே? சிவராமன் கேட்டிருக்கும் பல கேள்விகள் காலச்சுவட்டின் நிறுவன ஒழுங்கை புரிந்துகொள்ள முடியாத வியப்பிலிருந்து வருபவை. உலகில் மொழிபெயர்ப்பு, கலாசார பரிவர்த்தனை போன்றவற்றிற்கெல்லாம் நிறைய நல்கைகள் உள்ளன. எழுத்தாளர்களுக்கான முகாம்கள், ரெசிடண்சிகள் உள்ளன. அதெல்லாம் விலாசம் தெரிந்துகொண்டு முறையாக விண்ணப்பத்தால் யார் வேண்டுமானாலும் செல்லலாம். இந்த வேலையெல்லாம் பார்ப்பதற்கு நல்ல அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தினால் எல்லா பதிப்பகங்களும் இவற்றை சாதிக்கலாம். மிகச் சாதாரணமான விஷயங்களையெல்லாம் சர்வதேச சூழ்ச்சிபோல மயங்குவது படிப்பதற்கே சங்கடமாயிருக்கிறது. நானே நினைத்தால் பல ஆய்வு நல்கைகளை யு.ஜி.சி.யிலிருந்து பெற முடியும். எனக்கோ விண்ணப்ப படிவங்களை பார்த்தாலே ஜுரம் வந்துவிடும். அதற்காக விண்ணப்பித்து பணம் வாங்கி வேலை செய்பவர்களை நான் சதிகாரர்கள் என்று சொல்ல முடியுமா? கண்ணனின் தலையலங்க எழுத்துக்கள், அவர் பிறரை சாடி எழுதும் போக்கு ஆகியவற்றில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. அதேபோல தன் முயற்சிகள் சிறப்புற தமிழுக்கு வளம் சேர்க்க அனைவரையும் அணைத்துக்கொண்டு போகும், விரோதிகளையும் நண்பர்களாக்கிக்கொள்ளூம் பெருந்தன்மையையும் அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் என் எண்ணம். ஆனால் இப்படி பல விமர்சனங்கள் இருந்தாலும், காலச்சுவடு நிறுவனத்தின் வெற்றியும், செயல்பாடுகளும் அதை மர்மப்படுத்தி அதன் மீது வலைப்பின்னல் அது இது என்று பழிபோடும் செயல்களுக்கு இட்டுச்செல்வது சூழலின் சீரழிவையே காட்டுகிறது. சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் இருக்கக்கூடாது என்று விரிவாகவே எழுதிவிட்டேன். இன்னம் எழுத எவ்வளவோ இருக்கிறது. ஆனால் எழுத எழுத எழுத்தும் இறக்கும் என்ற ஆத்மநாமின் வரி என்னை எப்போதும் தொடர்வதால் போதுமென்றே நினைக்கிறேன். வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! ஜனவரி 6,2015