வழக்கு எண் 1215/2015
ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன்
வழக்கு எண் 1215-2015 ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவல் தொடர்பாக எழுந்த சர்ச்சையும் சாதிய, மதவாத சக்திகள் துண்டிவிட்ட போராட்டங்களும் எதிர்ப்பலையும் கடந்த 5.7.2016 அன்று சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக நாம் கருதுகிறோம். எதிர்பார்த்தப்படியே வலதுசாரி அறிவாளிகளும் டாக்டர் ராமதாஸ் போன்ற சாதிய அரசியல்வாதிகளும் இத்தீர்ப்பு ஒருதலைப் பட்சமானது என்று விமர்சித்ததுடன், வழக்கைத் தொடுத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைத் தாக்கியும் அறிக்கைகள் விடுத்தனர். தொலைக்காட்சி விவாதங்களில் பேசியும் வருகின்றனர். அவர்கள் எல்லோருடையமையமானவாதம் என்னவெனில், ஒரு எழுத்தாளனின் கருத்து சுதந்திரத்தையும், உணர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள நீதியரவர்கள் ஒரு வட்டாரம் முழுவதும் உள்ள மக்கள், பெண்களின் மண உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளவே இல்லை என்பதுதான். அதற்கு மேல், அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு படுத்தி எழுதுவதுதான் முற்போக்கா என்று கேள்வி எழுப்புகிறார்கள். இன்னும் சில கேள்விகளும் முற்போக்கு வாதிகளை மாதொருபாகன்: ஸ்517 நோக்கி வைக்கப்படுகின்றன. எல்லாக்கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியும். அதற்கு முன்னால் வழக்கு குறித்த சில அடிப்படைத் தகவல்களை வாசகர்களுக்கு முன் வைப்பது அவசியம் எனக் கருதுகிறேன். தமுஎகச சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு (வழக்கு எண் 1215 2015) மாதொருபாகன் நாவலில் எழுதப்பட்டுள்ளவை சரி என்றோ தவறு என்றோ வாதிடும் இடத்துக்கே செல்லவில்லை. எழுத்தாளர் பெருமாள் முருகன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து 12.01.2015 அன்று சமாமானப்பேச்சு வார்த்தை என்ற பேரில் கட்டாயப்படுத்து ஐந்து அம்ச முடிவுகளை அவர் மீது திணித்தது’ அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(அ) வின்படி சட்ட விரோதமானது, அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்பதுதான் தமுஎகச வழக்கில் முன் வைத்த ஒரே வேண்டுகோள். அந்த ஒப்பந்த அம்சங்கள் வருமாறு,
- திருச்செங்கோடு பகுதி மக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதால் இந்நுலை எழுதிய திரு. பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
- மாதொருபாகன் என்ற நுலில் வரும் கதை கற்பனையாகவே எழுதப்பட்டது என்றும் எழுத்தாளரால் தெரிவிக்கப்பட்டது.
- இப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில் திருச்செங்கோடு பகுதி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறாது.
- ஏற்கனவே வெளியிடப்பட்ட பிரதிகளில் விற்பனையாகாமல் உள்ள புத்தகங்களை எழுத்தாளரால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.
- இன்று (12.01.2015) தீர்வுகாணப்பட்ட இப்பிரச்சினைத் தொடர்பாக திருந்செங்கோடு பகுதி பொதுமக்களின் சார்பாக மேலும் எந்த விதமான போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளில் ஈடுபடமாட்டார்கள். இப்போது இந்த ஒப்பந்தம் செல்லாது என உயர்நீதிமன்றத் தீர்ப்பு சொல்லிவிட்டது. பின்னர் அந்த நாவலைத் தடை செய்ய வேண்யடம் எனவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்குத் தொடரவேண்டும எனவும், மூன்று வழக்குகள் தொடரப்பட்டன. அவை முறையே வழக்கு எண் 20372 2015 வழக்குத் தொடுத்தவர் ஆர்.வெள்ளியங்கிரி நாவலின் பிரதிபன் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும். நாவல்தடை செய்யப்பட வேண்டும் என்பது கோரிக்கை. அடுத்து வழக்கு எண் 7086 2015 வழக்குத் தொடுத்தது நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜனசங்கத்தின் சார்பாக அதன் பொருளாளர் மதிவாணன். பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க அனுமதி கோரி இவ்வழக்கு. மூன்றாவது வழக்கு - வழக்கு எண் 7153 2015 வழக்குத் தொடுத்தது கொங்கு வௌ£ளார் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பொன். கோவிந்தராசு அதே கிரிமினல் வழக்குக்கான கோரிக்கை. தமுஎகச பொதுநல வழக்காகத் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றம் அனுமதித்தாலும் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் இவ்வழக்கில் இணைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. உடனடியாக வழக்கில் இணையும் மன நிலைக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் வராததால்
- எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான் என்று அறிவித்த மனநிலையிலிருந்து அவர்விடுபடிவில்லை என்பதால் - தமுஎகச வின் வழக்கறிஞர் தோழர் ச.செந்தில்நாதன் தொடர்ந்து கோர்ட்டாரிடம் கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருந்தார். நாம் எழுத்தாளரோடு தொடர்ந்து பேசி வழக்கில் இணையுமாறு கேட்டுக் கொண்டிருந்தோம். இதற்குப் பிறகு, மாதொருபாகன் நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் வழக்கறிஞர் சுரேஷ் இவ்வழக்கில் இணைந்தார். தமுஎகச தொடர்ந்து வழக்கில் குறிப்பிடப்பட்டது போல தான் மிரட்டப்பட்டதாகவும் நிர்ப்பந்தத்தின் பேரில்தான் தான் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாகவும் பெருமாள் முருகன் தனது வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அது தமுஎகச தொடர்ந்த வழக்கிற்கு வலுச் சேர்த்தது. எழுத்தாளர்சார்பாக வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜரானார். எழுத்தாளர் பெருமாள் முருகனை வழக்கில் பொண்டுவர வழக்கறிஞர் ச.பாலமுருகன், காலச்சுவடு ஆசிரியர்குழு நண்பர்கள் எனப் பலரும் தொடர்ந்து பேசினர் என்பதைக் குறிப்பிட வேண்டும். நாவலின் எழுதப்பட்ட விஷயங்கள் சரியா தவறா என்கிற பகுதிக்குள் தமுஎகச, செல்லவில்லை. சரி தவறு என்பதையும், எழுத்தாளன் எதை எழுதவேண்டும் எழுதக்கூடாது என்பதையும் முடிவெடுக்கும் அதிகாரம் சாதி அமைப்புகளுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் கிடையாது என்று நிறுவுவதே தமுஎகசவின் நோக்கமாக இருந்தது. நாவலை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. அதை இந்திய நாட்டின் அனுமதிக்கப்பட்ட ஜனநாயக வழிமுறையில் செய்ய வேண்டும் என்பதே நமது நிலைபாடாக இருந்தது தவிர, இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்க வேண்டும். மாதொருபாகன்: ஸ்519 அதை வரலாறாகப் பார்க்கக் கூடாது என்பது நாம் நீண்ட காலமாகச் சொல்லி வரும் கருத்து. நீதிமன்றம் சென்றால் நிச்சயமாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏதும் நமக்கில்லை. முதலாளித்துவ அரசு எந்திரத்தின் ஒரு பகுதிதான் நீதிமன்றமும் என்பதை வெண்மணி தொடங்கி எத்தனையோ உழைக்கும் மக்களின் வழக்குகளில் பார்த்திருக்கிறோம். வாச்சாத்தி போல சில சமயம் தீர்ப்புகள் தற்செயலாக நியாயமாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. களத்தில் போராடிக்கொண்டே வழக்கையும் நடத்துவதுதானே நமது கலாச்சாரம். ஆகவே நுற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமுஎகசவின் தெருமுனைப்போராட்டங்கள் ஆர்ப்பாட்டம், கண்டனக் கூட்டங்கள், கண்டனக்கருத்தரங்கங்கள் என நடத்திக்கொண்டே வழக்கையும் நடத்தினோம். தமுஎகச தொடர்ந்து வழக்கில் எதிரிகளாகப் பட்டியலிடப்பட்டவர்கள் யார் என்பதை வாசகர்கள் பார்க்க வேண்டும்,
- தமிழக அரசு - அதன் சார்பில் உள்துறைச் செயலர்
- நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
- நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்
- திருச்செங்கோடு துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்
- பொன். கோவிந்தராசு - அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கிரிவல நலச்சங்கம்
- கே. சின்னுசாமி - திருச்செங்கோடு இந்து முன்னணி
- கந்தசாமி - மோரூர் கன்னகுல கொங்குநாட்டு வெள்ளாளர் டிரஸ்ட்
- எம். மாதேஷ், தலைவர், செங்குந்தர் மகாஜனசங்கம்
- பி.டி. ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர், கொங்கு வெள்ளாளர் கூட்டமைப்பு
- மகாலிங்கம், தலைவர், இந்யத முன்னணி, திருச்செங்கோடு தாலுகா
- யுவராஜ், தீரன் சின்ன மலை பேரவை(இவர்தான் கோகுல் ராஜ் கொலை வழக்கில் கைதாகிச் சிறையிலிருப்பவர்)
- அனிதாவேலு, திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தலைவர்
- முத்துச்சாமி, டி.வி.ஏ.என் ஜீவல்லரி, வணிகர் பேரவை தலைவர்‘ இத்துடன் காலச்சுவடு பதிப்பாளரும் சேர்க்கப்பட்டிருந்தார். அந்தவட்டாரத்தின்சாதிச்சங்கங்கள், இந்துமுன்னணி போன்ற மதவெறி அமைப்பினர், கொலை வழக்கில் உள்ளே இருக்கும் யுவராஜ் என அவ்வட்டாரத்தின் பிற்போக்கான சக்திகள் மற்றும் அரசு எந்திரம் ஒரு புறமும் தமுஎகசவும் எழுத்தாளர் பெருமாள் முருகனும் மறுபுறமாக இருந்து நடத்தப்பட்ட ஒரு போராட்டம்தான் இந்த வழக்கு. நாவலின் உள்ளடகத்தை ஆதரித்து காலச்சுவடு சார்பாக வழக்கறிஞர் சுரேஷ், எழுத்தாளரின் வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர் வழக்காடினர். நாமக்கல்லில் கட்டப்பஞ்சாயத்துப் பண்ணி போடிப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் நாவலைத் தடை செய்ய முடியாது என்றும் எழுத்தாளர் மீது கிரிமினல் வழக்குத் தொடர எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் எதிரிகள் தொடுதத வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உனக்குப்பிடிப்பவில்லை என்றால் புத்தகத்தை மூடி விடு அல்லது துக்கி எறிந்து விடு. எழுத்தாளனை முடக்காதே என்றும் தெட்ட தெளிவான வார்த்தைகளில் தீர்ப்பு வந்துள்ளது. பெருமாள் முருகன் துணிச்சலாக மீண்டும எழுத முன் வர வேண்டும் எனவும் தீர்ப்பு கேட்டுக்கொண்டுள்ளது. முற்போக்கு சக்திகளுக்கும் பிற்போக்கு சக்திகளுக்கும் நடந்த நீதிக்கான போராட்டத்தில் முற்போக்கு சக்திகளுக்கு மகத்தான வெற்றியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பின் வரிகளைப் பற்றிக் கொண்டு நான் மெல்ல மெல்ல எழுந்து வந்துவிடுவேன் என எழுத்தாளர் பெருமாள் முருகனும் அறிக்கை விடுத்துள்ளார். ஆகவே மூலத்தில் மிளகாயை அரைத்து வைத்தது போல பிற்போக்கு சக்திகள் தீர்ப்புக்.க எதிராகக் கூப்பாடு போடுகிறார்கள். உண்மையில் அவ்வட்டார மக்களில் ஒரு பகுதியினர் இந்நாவலின் சில பக்கங்களால் (பிரச்சாரம் செய்யப்பட்டதால்) காயப்பட்டிருக்கலாம். தீர்ப்பு சாதகமாக வந்துவிட்டாலும் கூட அத்தகைய பகுதிகளை நீக்கிவிட்டுத்தான் திருத்திய பதிப்பை வெளியிடப்போவதாக எழுத்தாளார் பெருமாள் முருகன் கூறுகிறார். மக்களுக்காகத்தானே எழுதுகிறோம். அவர்களது மனம் புண்பட எழுத்தாளனாகிய நான் எப்படி சம்மதிப்பேன் என்கிற இடத்தில் எழுத்தாளர் நிற்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய நிலைபாடு. மாதொருபாகன்: ஸ்521 2010 ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் மாதொரு பாகன். 2011 ஆம் ஆண்டு அதன் திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பும், 2012 இல் அதன் மூன்றாம் பதிப்பும் வெளியானது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ளிழிணி றிகிஸிஜி கீளிவிணிழி 2014 ஆம் ஆண்டு பென்குயின் பதிப்பக வெளியீடாக வந்தது. தமிழில் சுமார் ஐயாயிரம் பிரதிகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தபோது எழாத சர்ச்சைகள் 2015இல் ஏன் எழுப்பப்பட்டன. அப்புத்தகம் இந்துப்பெண்களை இழிவு படுத்துவதாகவும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலை இழிவுபடுத்துவதாகவும் சங் பரிவார் அமைப்பினரும் அப்பகுதியின் ஆதிக்க சாதி அமைப்பினரும் தொடர்ந்து மக்களிடம் துஷ்பிராச்சாரம் செய்தனர். நாவலின் சில பக்கங்களை இடையிலிருந்து எடுத்து நகல் செய்து கோவிலுக்கு வரும் மக்களிடம் விநியோகித்தனர். இதை காவல்துறையோ அரசு நிர்வாகமோ தலையிட்டுத் தடுக்கவில்லை. தடுத்திருக்க வேண்டும் என தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது. மக்களையும் சாதிய மதவாத சக்திகளையும் பிரித்துப் பார்ப்பது அவசியம். இதைதீர்ப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. யாரோ சில குறுகிய எண்ணம் படைத்த சக்திகளின் துண்டுதலால்தான் மக்கள் மனம் புண்பட்டது என்று தீர்ப்பு தெளிவாகக் கூறுகிறது. நாம் கேள்விப்பட்டவரை திருச்செங்கோடு பகுதியில் மக்கள் மத்தியில் எழுந்து வரும் ஒரு பேச்சு ‘பேசாம இருந்திருந்தா இலக்கியவாதிகள் அவர்களின் வாசகர்கள் அளவில் அருவமில்லாம முடிஞ்சு போயிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை நோட்டீஸ் போட்டு பெரிசாக்கி நம்ம ஊரைக் கேவரப்படுத்தினதே நம்ம ஊருசாதிசங்கங்களம் இந்து முன்னணியும்தான்’ என்பது. இத்தகைய பேச்சுக்கள் வளரட்டும். - அதுதான் உண்மை என்பதால். மாதொருபாகன் நாவலின் அடிப்படை நோக்கம் குழந்தைபேறில்லாத பொன்னா - காளி என்கிற தம்பதியின் துயரம்தானே ஒழிய ஊரை இழிவுபடுத்துவது அல்ல என்று தீர்ப்பு திட்ட வட்டமாகக் கூறுகிறது. எந்த வாதங்களையெல்லாம் தீர்ப்பு அடித்துக் காலி செய்துவிட்டதோ அதே வாதங்களை தின மணியில் குருமூர்த்தியும் தன் அறிக்கையில் டாக்டர் ராமதாசும் மீண்டும் கிளைப்புகின்றனர். அவ்வட்டாரத்தில் சாதியரீதியான, மதரீதியான அணிதிரட்டல் அரசியலை முன்னெடுக்கவே இவர்கள் அப்பகுதி மக்கள் அப்பாவிகள், வன்முறையை விரும்பாதவர்கள் என்றெல்லாம் தடவிக் கொடுத்துப் பேசி வருகிறார்கள். கிளப்பி விட நயவஞ் சகமாக முயல்கிறார்கள் என்பது வெளிப்படை. நமக்கும் தெரியும் அப்பகுதி மக்கள் யாரும் வன்முறையாளர் அல்ல. வன்முறையைக் கிளப்பிவிட்ட இதே சக்திகள் இன்று நாக்கில் தேன் தடவிப்பேசும் அபாயத்தைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தினமணியில் இரு பகுதிகளாக சங் பரிவார் அறிவாளி குருமூர்த்தியின் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. படைப்பாளிக்குக் கட்டற்ற சுதந்திரம் தேவையில்லை என்பதுதான் அவரது வாதம். சுதந்திரத்தின் எல்லைகளை மதவாதிகளும் சாதியவாதிகளும் தீர்மானிக்க முடியாது என்பதுதான் நமது நிலைபாடு. தீர்ப்பும் அதையே வலியுறுத்திவிட்டது. நாவல் குறித்து குருமூர்த்தி தினமணியில் எழுப்பிய கேள்விகளுக்கு இதே தினமணியில் அன்று (15.1,2015) வந்த ஒரு தலையங்கமே சரியான பதிலாக இருக்கும் என்பதால் அத்தலையங்கத்தை கீழே முழுமையாகத் தருகிறோம். இத்தீர்ப்பு முற்போக்காளர்களும் ஜனநாயக சக்திகளும் கொண்டாட வேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. கொண்டாடுவோம். மக்களிடம் எடுத்துச் செல்வோம். (இத்தீர்ப்பின் முழுமையான தமிழ் மொழி பெயர்ப்பு தமுஎகச வெளியீடாக ஒரு நுலாக வெளிவர இருக்கிறது.) செம்மலர், ஆகஸ்ட் 2016