கருத்துச் சுதந்திரத்திற்கு எட்டு அச்சுறுத்தல்கள்
ஆசிரியர்: இராமச்சந்திர குஹா
கருத்துச் சுதந்திரத்திற்கு எட்டு அச்சுறுத்தல்கள் ராமச்சந்திர குஹா சுதந்திரம் என்பதற்கு ஏதாவது பொருள் இருக்கக் கூடுமென்றால், அது மக்கள் கேட்க விரும்பாதவற்றை அவர்களிடம் சொல்ல முடிகிற உரிமை என்பதாகத்தான் இருக்கும்.
- ஜார்ஜ் ஆர்வெல் 2007இல் வெளியான ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’ என்ற எனது நூலில் நமது நாட்டை ‘ஒரு 50-50 ஜனநாயக நாடு’ என்று குறிப்பிட்டிருந்தேன். சில அம்சங்களில் இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு. சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள், நாட்டின் எந்தப் பகுதிக்கும் பயணம் செல்லும் உரிமை போன்றவற்றில். ஆனால் குற்றவியல் நீதி ஏறத்தாழக் குலைந்திருப்பதிலும், அரசியல் ஊழல்களை ஒழிக்க முடியாத இயலாமையிலும் நாடு அரைகுறையான ஜனநாயகத்தையே கொண்டிருக்கிறது. ஜனநாயகப் போதாமை பிரதானமாக இருக்கும் ஒரு துறை கருத்து சுதந்திரம். எழுத்தாளர்களும் கலைஞர்களும் திரைப்பட இயக்குநர்களும் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதற்கு இந்நாட்டில் வரப்பெல்லைகள் இருக்கின்றன. மாதொருபாகன்: ஸ்529 இந்தக் குறைபாடு அறிஞர்களாலும் செயற்பாட்டாளர்களாலும் தீர்க்கமாக அலசப்பட்டு, கண்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த அலசல்கள் எல்லாமே சட்டப் பெருக்காடியின் அடியில் வைத்தே ஆராயப்பட்டு வந்துள்ளன (கௌதம் பாட்டியாவின் ‘ளியீயீமீஸீபீ ஷிலீஷீநீளீ ஷீக்ஷீ ஞிவீstuக்ஷீதீ’ நூலைப்போல). இந்தக் கட்டுரை சட்டத்தில் தொடங்கி இப்பிரச்சினையின் பரந்துபட்ட சமூகப் பரிமாணங்களை ஆய்வு செய்ய முயல்கிறது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் எதிர்நோக்கும் எட்டு அச்சுறுத்தல்களை இங்கு அடையாளம் கண்டிருக்கிறேன். தனித்தனியாகவோ கூட்டாகவோ செயல்படும் அச்சுறுத்தல்கள் என்று இவற்றைச் சொல்லலாம். பேச்சு சுதந்திரத்திற்கான அறம் மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டிய முதல் சிந்தனையாளர் நானறிந்த வரையில் பாரூச் ஸ்பினோஸா. 1670இல் வெளியான அவரது ‘ஜிலீமீஷீறீஷீரீவீநீணீறீ - றிஷீறீவீtவீநீணீறீ ஜிக்ஷீமீணீtவீsமீ’இல் “சுதந்திரமாகச் சிந்திக்கும் ஒருவனது குணத்தையும், எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்கும் அவனது திறனையும் வேறொருவனுக்கு கைமாற்றிக் கொடுக்க முடியாது. கட்டாயப்படுத்தியும் இம்மாற்றீட்டை நிகழ்த்தவியலாது. அதனால்தான் மக்களின் மனங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கங்களை அடங்குமுறையாட்சி என்கிறோம்” என்கிறார். “ஒருவன் பேச விரும்புவதையும், அதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க முயல்வதையும் தடுப்பது கொடுங்கோலாட்சி. மிதவாத அரசில் அனைவருக்கும் இச்சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும்.” என்றும் அவர் கூறுகிறார். தர்க்க வன்மையுடைய இக்கூற்று இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான். ஆனால் நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன. பேச்சு சுதந்திரத்திற்கு நியாயமான, நேரிய கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? விரும்புவதை யெல்லாம் பேசுவதற்கு மக்களை அனுமதிக்கலாமா? வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளுக்கும் இவ்வுரிமை உண்டா? ஜெர்மனியில் ஹிட்லரைக் கொண்டாடுபவர்களுக்கும் இந்தியாவில் நாதுராம் கோட்ஸேவை பாராட்டுபவர்களுக்கும் இவ்வுரிமை உண்டா? ஸ்பினோஸா இதைப்போன்ற கேள்விகளையும் பரிசீலித்திருக்கிறார். ஓர் அரசு அதன் குடிமக்களுக்குப் பேச்சு சுதந்திரத்தை வழங்கித் தீரவேண்டுமென்றாலும் ‘எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்த ஓர் அரசு அனுமதிக்குமென்றால் அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்கிறார். ‘கருத்துச் சுதந்திரம் என்பதை அரசின் நிலையாண்மையைக் குலைக்காத வகையில் எந்தளவுக்கு ஒவ்வொருவருக்கும் அனுமதிக்கலாம் என்று கவனிக்க வேண்டும்’ என்று ஸ்பினோஸா கருத்து சுதந்திரத்திற்கான எல்லைகளை வரையறுத்துச் சொல்கிறார். உதாரணமாக ஒரு பேச்சோ, புத்தகமோ, ஓவியமோ, திரைப்படமோ பெரியளவுக்கு வன்முறை, உயிர்ப்பலி, குழப்பத்தைத் தூண்டவோ வழிவகுக்கவோ செய்து, அரசைக் கவிழ்க்கவும் நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கவும் செய்யுமென்றால், அதனை அனுமதிக்கக் கூடாது, தடை செய்தாக வேண்டும் என்பதுதான் அவரது கருத்து. ஸ்பினோஸாவின் கருத்துச் சுதந்திரம் பற்றிய இந்தப் பார்வையோடு, காந்தியின் கருத்தை ஒப்பிட்டுப் பார்ப்போம். 1910இல் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது ‘இந்து சுயராஜ்ஜியம்’ என்ற நூலை எழுதினார். குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட இந்நூலை நேட்டாலில் ஃபீனிக்ஸ் முகாம் வெளியிட்டது. இந்நூலை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய சிலர் முயன்றபோது பிரிட்டிஷ் இந்திய அரசு நூலின் பிரதிகளைப் பறிமுதல் செய்தது. காந்தியின் அந்நூலை அவர்கள் படிக்கக்கூடிய மொழியில் (ஆங்கிலம்) மொழிபெயர்த்து, ஆங்கிலப் பேரரசின் உயரதிகாரிகள் இந்நூல் ‘ராஜ துரோகமானது’ என்று அறிவித்து இந்தியாவில் தடை செய்தனர். இத்தடையுத்தரவைக் கேள்வியுற்றதும், அரசிற்கு காந்தி ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார். அந்நூலின் உள்ளடக்கத்தை விரிவாக விளக்கிவிட்டு, அவர் முன்னெடுத்துச் செல்லும் எதிர்ப்பு முறை முற்றிலும் அகிம்சை வழியிலானது என்று குறிப்பிட்டார். (இந்தக் கடிதம் காந்தியின் மொத்த தொகுப்பில் இடம்பெறவில்லை. தேசிய ஆவணக் காப்பகத்தின் ஒரு கோப்பில் ஒளிந்திருப்பதை வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர். மெஹ்ரோத்ரா எனக்குக் காட்டினார்). அக்கடிதத்தில் காந்தி எழுதுகிறார்: ‘ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குச் சரியென்று நினைக்கும் கருத்தை கொண்டிருக்கவும், வெளிப்படுத்தவும் உரிமை உண்டு என்பதைச் சொல்லும் அதே நேரத்தில், அதை வெளிப்படுத்த யாருக்கெதிராகவும் வன்முறையை அவன் பயன்படுத்தக்கூடாது என்பதே என் பணிவான கருத்து.’ இந்த வாசகத்தைச் சற்றே மாற்றியமைத்தால் கருத்துச் சுதந்திரம் என்பதற்கு ஒரு ஜனநாயக அரசு எத்தகைய வரம்புகளை விதிக்கலாம் என்பதற்கான ஒரு பலனுள்ள விளக்கத்தைப் பெறமுடியும். காந்தியின் ஆண்பாலின் மொழிவழக்கத்தைத்தாண்டி இதனைப் பார்த்தால், அவர் ‘பயன்படுத்தக்கூடாது’ என்று சொல்வதற்கு ‘தூண்டக்கூடாது’ என்றும் பொருள் அடங்கியிருப்பதை அறிய முடியும். எனவே இவ்வாறாக காந்தியின் கூற்றை மாற்றிப் பார்ப்போம்: ‘ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனக்குச் சரியென்று தோன்றுகிற மாதொருபாகன்: ஸ்531 கருத்தைக் கொண்டிருக்கவும் அதனைச் செயற்படுத்தவும் உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தும் முறையில் அவனோ, அவளோ, யாருக்கெதிராகவும் வன்முறையைப் பயன்படுத்தவோ, தூண்டவோ கூடாது.’ இந்த முன்னறிவிப்போடு, தற்கால இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு இருக்கும் எட்டு அச்சுறுத்தல்களை விளக்க முயல்கிறேன். முதல் அச்சுறுத்தல் புராதன காலத்து காலனியச் சட்டங்களை இன்னமும் வைத்திருப்பது. இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் கலைப்படைப்புகள், திரைப்படங்கள், புத்தகங்களைத் தடை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டு: சட்டப்பிரிவு 153 (‘கலவரம் ஏற்படுத்த வேண்டுமென்றே தூண்டிவிடப்படும் செயல்கள்’); 153 கி (‘மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி இவற்றால் வேறுபட்டுள்ள குழுவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தி பொது அமைதியைக் குலைக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்வது); 295 (எந்தவொரு இனமக்களையும் புண்படுத்தும் நோக்கில் வழிப்பாட்டுத் தலங்களைச் சிதைத்தல், அவமதித்தல்); 295கி (‘எந்தவொரு பிரிவினரின் மதவுணர்வுகளையும் மதநம்பிக்கைகளையும் சீண்டும் வகையில் வேண்டுமென்றே நிகழ்த்தப்படும் துர்ச் செயல்கள்’); 298 (எவரொருவரின் மதவுணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கோடு பேசுதல், எழுதுதல்); 499, 500 ஆகியவை ஒருவரின் ‘நற்பெயரை’க் குலைக்கும் செயல்கள் தண்டனைக்குரிய குற்றச்செயல்கள் எனக் கருதுகின்றன. சட்டப்பிரிவு 505 (பொது அமைதியைக் குலைத்து கலவரத்தைத் தூண்டும் அறிக்கைகள்); இவையெல்லாவற்றையும்விட அபாயகரமான சட்டப்பிரிவு 124 கி. இது தேசத்துரோகம் தொடர்பானது (சட்டப்படி நிறுவப்பட்ட இந்திய அரசின் மீது வெறுப்பையோ, அவமதிப்பையோ தூண்டும் வகையில் பேசுவதும், எழுதுவதும், குறிப்புகளால் சுட்டுவதும், காட்சியமைப்பால் வெளிப்படுத்துவதும் அல்லது வேறெந்தத் தொடர்பு முறைகளாலும் வெளிப்படுத்துவதும் ஆயுள் தண்டனை விதிக்கத்தக்க குற்றச் செயல்களாகும்.) இந்தச் சட்டப்பிரிவுகள் நீதிமன்றங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் கருத்துச்சுதந்திரத்தின் எல்லைகளை நேரத்துக்குத் தகுந்தபடி நிர்ணயித்துக் கொள்ளும் சௌகரியத்தை அளிப்பதாக உள்ளன. இச்சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத் தொகுப்பை இயற்றியவரே தாமஸ் பாபிங்டன் மக்காலே என்பதுதான் மிகப்பெரும் முரண் நகைச்சுவை. மக்காலேதான் இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியவர். இடதுசாரி தேசபக்தர்கள் மக்காலேவை ஏகாதிபத்தியர் என்பதால் வெறுத்தார்கள் என்றால், வலதுசாரி தேசபக்தர்கள் அவரை எதிர்த்ததற்குக் காரணம் அவர் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்தி, நம் நாட்டுக்குரிய அறிவுசார் செல்வங்களையும் இலக்கியங்களையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிட்டார் என்பதாக இருந்தது. அவர் உருவாக்கிய கல்வி முறையில் பயின்ற, ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் எழுதுகிற, மேலைநாட்டு கருத்துக்களைச் சுவீகரித்த உலகப்பொதுப் பற்றாளர்களும் பண்பாட்டிலிருந்து அந்நியப்பட்டவர்களுமான அறிவுஜீவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ‘மக்காலே புத்திரர்கள்’ என்ற பட்டப்பெயரைக்கூடச் சூட்டியிருந்தது. இந்திய இடதுசாரிகளும் இந்திய வலதுசாரிகளும் தாமஸ் பாபிங்டன் மக்காலேவை வெறுப்பதாகப் பிரகடனம் செய்து கொண்டிருந்தாலும் அவரால் வடிவமைக்கப்பட்ட குற்றவியல் தண்டனைச் சட்டங்களை சிபிஐ (எம்) மற்றும் பாஜக கட்சிகள் அரசாளும் மாநிலங்களில் கருத்துச்சுதந்திரத்தை அடக்குவதற்காகத் தாராளமாகப் பயன்படுத்தியே வருகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை தற்போது மத்திய அரசிலும் இப்போக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டப்பிரிவுகளைக் காங்கிரஸ் அரசாங்கங்களும் பரவலாகப் பயன்படுத்தியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியைப் போற்றி வருவதாகச் சொல்லிக்கொள்கிறது. காந்தியும் வாழ்நாள் முழுக்கக் காங்கிரஸ்காரராகவே இருந்தவர். சோனியா மற்றும் ராகுல்காந்தியின் காங்கிரஸாக இருக்கும் இன்றையக் காங்கிரஸ் கட்சியிடம் அம்மாபெரும் காந்தியே தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் என்பதை யாராவது ஞாபகப்படுத்த வேண்டும் போலிருக்கிறது. ‘இந்து ஸ்வராஜ்’ 1910இல் தடை செய்யப்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். பன்னிரண்டு வருடங்கள் கழித்து அவர் இந்தியாவுக்குத் திரும்பியதும், அவர் முன்னெடுத்து வைத்த ஒத்துழையாமை இயக்கம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து காந்தி கைது செய்யப்பட்டார். இந்தப் போராட்ட முறை பிரிட்டிஷாரைக் கதிகலங்க வைத்திருந்தது. யங் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரைகள் சட்டப்பிரிவு 124 கின்படி தேசத்துரோகச் செயற்பாட்டில் அடங்கும் என்று குற்றம் சுமத்தி அவருக்குத் தண்டனை வழங்க முடிவெடுத்தனர். அரசாங்கத்தை விமரிசித்து எழுதியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டு கைதான முதல் தேசியவாதி காந்தி அல்ல. அவரே கடைசியாகவும் இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டங்களுக்கெல்லாம் ஒரு ஜனநாயக, சுதந்திர தேசத்தில் இடமில்லை என்றும், சுதந்திரம் கிடைத்தபின் இவையெல்லாம் மாதொருபாகன்: ஸ்533 நீக்கப்படுமென்றும் காந்தி நம்பினார். சட்டப்பிரிவு 124கி வை ரத்து செய்ய வேண்டுமென நாடு தழுவிய போராட்டம் ஒன்றை நடத்த வேண்டுமென்று 1929ஆம் வருடம் அவரது யங் இந்தியா இதழின் உணர்ச்சிகரமான தலையங்கம் ஒன்றில் அழைப்பு விடுத்தார். ‘இச்சட்டப்பிரிவு சட்டம் என்ற சொல்லையே பலாத்காரம் செய்கிறது’ என்று அத்தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். ‘நாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் அது நம் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டேயிருக்கிறது.’ ‘124 கி என்ற சட்டப்பிரிவு உறையிலிருந்து உருவப்பட்டிருக்கும் வாள். மக்களின் ஆதரவின்றி ஆட்சி செய்துகொண்டிருக்கும் இக்கொடுங்கோலர்களின் கண்ணசைவில் இந்த வாள் நம் கழுத்தின் மீது இறங்கத் தயாராக இருக்கிறது.’ ‘இந்தச் சட்டப்பிரிவை மட்டுமல்ல, இதைப்போன்ற பிற சட்டப்பிரிவுகளையும் ஒழிப்பதென்பது, இந்த ஆட்சியையும் ஒழித்து சுயராஜ்ஜியத்தை அடைவது என்பதே ஆகும். எனவே இச்சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு நாம் நடத்த வேண்டிய போராட்டம் என்பது சுயராஜ்ஜியத்தை அடைவதற்கான போராட்டம் என்றே நீங்கள் கருத வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு நடைபெற்றவை இதற்கு நேரெதிரானவை என்பதுதான் சோகம். 124 கி போன்ற சட்டப்பிரிவுகளை ரத்து செய்வதற்குப் பதிலாக நாம் அவற்றை மேலும் பலம் பொருந்தியவையாக மாற்றினோம். இது எதிர்பார்த்திருக்கக் கூடியதுதான். மாநில அரசுகளிடம் இருந்து எழும் எதிர்ப்புகளை அடக்குவதற்காக அத்தகைய சட்டங்கள் தேவையாக இருந்தன. சுதந்திரம் கிடைத்த உடனேயே நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் இந்திய அரசு எவ்வளவு பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துபவையாக அமைந்தன. முதலாவது காந்தியின் படுகொலை. ஒரு மதவெறியன் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகப் கூறப்பட்டாலும் அந்த மனிதன் இந்தியாவை ஒரு இந்து பாகிஸ்தானாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு அரசியல் இயக்கத்தின் அங்கமாக இருந்ததுதான் இக்கொடுஞ்செயலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. இதற்கு ஆறு வாரங்கள் கழித்து கல்கத்தாவில் நடந்த ஒரு ரகசியக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அரசுக்கெதிராக ஒரு ஆயுதப்புரட்சியை நடத்தத் திட்டம் தீட்டியது. இவ்வாறாக அப்போதுதான் பிறந்த சுதந்திர இந்திய அரசுக்கு ஒரே நேரத்தில் வலதுசாரி தீவிரவாதமும் இடதுசாரி தீவிரவாதமும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருந்தன. மத்திய அரசு இவற்றை எப்படி சமாளிக்கப்போகிறது? இந்தக் கேள்விதான் பிரதம மந்திரி ஜவாஹர்லால் நேருவையும், உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலையும், சட்டத்துறை அமைச்சர் அம்பேத்கரையும் எதிர்நோக்கியிருந்தது. இந்த இடது, வலதுசாரிகளின் தீவிரவாதத்திற்கெதிராக பச்சிளம் இந்திய அரசை காப்பாற்றி நிலைநிறுத்துவதற்கு முதல் நடவடிக்கையாக ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசரையும் கம்யூனிஸ்ட் இதழான கிராஸ்ரோட்ஸையும் இந்திய அரசு தடைசெய்தது. இந்த பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தடையை எதிர்த்து, நீதிமன்றம் செல்ல, தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்தது. கருத்துச்சுதந்திரத்தை அரசு கட்டுப்படுத்தக்கூடாது என்ற அறிவுரையோடு தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்தது. கருத்துச் சுதந்திரத்தை அரசு கட்டுப்படுத்தக்கூடாது என்ற அறிவுரையோடு தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. அப்போதுதான் நேருவும், படேலும், அம்பேத்கரும் அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவில் முதலில் இருந்த வாசகம் இதுதான்: ‘தேசப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்கும் முயற்சியிலோ ஈடுபட்டால் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என்பதற்குத் தடை விதிக்கப்படும்.’ மேற்கண்ட வாசகம் கச்சிதமான வாக்கிய அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. அதாவது ஒரு இலக்கியமோ, ஓவியமோ, திரைப்படமோ, அது அரசைக் கவிழ்த்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே தடைசெய்யப்படும் என்று சுட்டுவதாகக் கொள்ளலாம். ஆனால் நேரு, படேல், அம்பேத்கர் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் இவ்வாறாக மாற்றியமைக்கப்பட்டது. ‘கருத்துச் சுதந்திரம் என்பது சமூக நன்னடத்தைக்கும் பொது அமைதிக்கும், அயல்நாடுகளுடனான உறவுக்கும் ஊறு விளைவிக்குமானால் தடைசெய்யப்படும்.’ அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்படிவத்தில் இருந்த சட்டப்பிரிவுகள் 153, 153 கி, 295, 295 கி, 499, 500, 505 ஆகியவை காலப்போக்கில் பலனற்ற வெற்றுப்பிரிவுகள் என்று வலுவிழந்து விட்டி ருக்கக்கூடும். ஏனென்றால் ‘பொதுமக்களுக்குத் தொல்லையூட்டும் செயல்கள்’, ‘மதவுணர்வுகளைப் புண்படுத்துதல்’, ‘வேண்டுமென்றே பிரச்சனைகளைத் தூண்டிவிடுதல்’, ‘ஒருவரின் நன்மதிப்பைக் குலைத்தல்’ போன்றவை அரசுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கக் கூடிய அம்சங்களாக இருக்க முடியாது. இந்தக் மாதொருபாகன்: ஸ்535 காரணங்களுக்காகத் தடை கோருபவர்கள் யாரும் நீதிமன்றத்தை அணுகப்போவதில்லை. ஆனால் 124 கி என்ற சட்டப்பிரிவைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் நீதிமன்றங்கள் இச்சட்டப்பிரிவில் ‘தேசத்துரோகம்’ என்று குறிப்பிடுவதை அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகக் கருத்து சுதந்திரத்திற்குத் தடைவிதிக்கும் தவறைச் செய்துவிடும். ஆனால் முதல் சட்டத்திருத்தம் இவையெல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ‘பொது அமைதி’ ‘சமூக நன்னடத்தை’ என்பனவெல்லாம் விரிவான பொருள் கொண்டவை. இவற்றைச் சாக்காக வைத்து அரசாங்கம் தனக்கெதிராக எழுகின்ற எதிர்ப்பு, விமரிசனங்களை நீதிமன்றங்களின் துணையோடு எளிதாக எதிர்க்குரல்களை அடக்கிவிட முடியும். சுதந்திர இந்தியாவின் எதிர்காலமே பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் நேருவும் படேலும் அம்பேத்கரும் எடுத்த தவிர்க்க முடியாத முடிவு அது. இப்போது பின்னோக்கிப் பார்க்கையில் அரசியலமைப்புச் சட்டம் நீக்க விரும்பிய காலனியச் சட்டங்களை மீண்டும் வீரியத்தோடு அறிமுகப்படுத்தவே அந்த முதல் சட்டத்திட்டம் பயன்பட்டிருப்பது புரிகிறது. இந்தக் காலனியச் சட்டங்கள் ஜனநாயக யுகம் என்று நாம் பெருமையாக அழைத்துக் கொள்ளும் பின்காலனிய யுகத்தின் கருத்துச் சுதந்திரத்தை நெரிப்பதற்காகத்தான் பயன்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சுதந்திர இந்தியா தனது பங்கிற்கு மேலும் சில கட்டுப்பாட்டுச் சட்டங்களை இயற்றியிருக்கிறது. ‘தேசத்தின் கௌரவ குலைப்பு தடுப்புச்சட்டம், 1971’ என்ற சட்டத்தைப் பார்ப்போம். இச்சட்டத்தை வைத்து, தலையணையில் மெத்தையில் தேசியக்கொடி உருவத்தைப் பின்னுவது முதல், தேசியக்கொடி தரையைத் தொடும்படி மாட்டுவது, நிலத்தின்மீது அல்லது நீரின் மீது படும்படி வைப்பது போன்ற காரணங்களுக்காக மூன்று வருடம் வரை யாரையும் சிறையில் அடைக்க முடியும். தேசியகீதம் இசைக்கப்படுவதை யாராவது தடுக்க முயன்றாலும் இதே தண்டனை வழங்கலாம். அண்மை உதாரணம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008இன் 66 கி சட்டப்பிரிவு. இதன்கீழ் (அகிம்சா முறையில்) அரசியல் அபிப்பிராயங்களைச் சொன்னாலும்கூடக் கைது செய்யப்படலாம். இச்சட்டப்பிரிவு மே 2015இல் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டாலும், அதற்கு முன்பே பல கலைஞர்களும் எழுத்தாளர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கு இந்தியாவில் இருக்கும் முதல் அச்சுறுத்தல் ஜனநாயகத்திற்கு எதிராக முன்பொரு காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள். இரண்டாவது அச்சுறுத்தல் சட்டத்துறையில் நிலவும் குறைபாடுகள். பொதுவாகவே திரைப்படங்கள், புத்தகங்கள் கலைப்படைப்புகளைத் தடைசெய்யக் கோரித் தொடரப்படும் வழக்குகளை நமது கீழமை நீதிமன்றங்கள் மிக வேகமாகப் பரிசீலித்து தீர்ப்பு வழங்கிவிடுகின்றன. இந்த வழக்குகள் பெரும்பாலும் அற்பத்தனமாக, ஆதாரமற்றதாக, அரசியல் உள்நோக்கங்கள் கொண்டதாகவே இருக்கும். இவற்றில் 99.9%ஐ உடனடியாக தள்ளுபடி செய்துவிடக்கூடியதாகவே இருந்தாலும் அப்படி நடப்பதில்லை. ஏன்? எழுத்தாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களைப் போல நீதிபதிகளும் செய்தித்தாள்களில் தமது பெயர் வருவதை விரும்புவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வேறு சில நிழலான காரணங்களும் பொருளியல் ரீதியான அல்லது கொள்கை ரீதியான சகிப்பின்மைக் காரணங்களும் இருக்கக்கூடும். உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் பெரும்பாலும் எழுத்தாளர்கள், கலைஞர்களின் உரிமைக்கு ஆதரவு காட்டுபவையாகவே உள்ளன. ஆனால் கீழமை நீதிமன்றங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தால் நீதித் துறையின் மந்தமான செயல்முறைகளின் காரணமாக மேல்நிலை நீதிமன்றங்களை அடைந்து தடை உத்தரவை ரத்து செய்வதற்கே பற்பல வருடங்கள், தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன. அவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்க வெகுசில கலைஞர்களாலும் பதிப்பாளர்களாலுமே முடியும். பெரும்பாலும் அவர்கள் சோர்வடைந்து விட்டுக் கொடுத்துவிடுவார்கள். தீய நோக்கோடு வழக்கு தொடுத்தவர்கள், அறியாத அல்லது விளம்பரம் தேடுகின்ற சார்நிலை நீதிபதிகளோடு சேர்ந்துகொண்டு நம் நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது அச்சுறுத்தல் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே வரும் அடையாள அரசியல். எந்தவொரு சமூகமும், அது எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி, ஒரு புத்தகமோ, ஒரு கலைப்படைப்போ, ஒரு திரைப்படமோ தமது உணர்வுகளை, அது எத்தகைய உணர்வாக இருந்தாலும் சரி, பாதித்துவிட்டதாக, புண்படுத்தி விட்டதாகக் கூறி அப்படைப்பின் ஆயுளை மிக எளிதாக முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும். 1990களின் ஆரம்பத்தில் சாதி அடையாளத்தை முன்வைத்து மண்டல் போராட்டங்களும், மத அடையாளத்தை முன்வைத்து அயோத்தியா போராட்டங்களும் உச்சத்தில் இருந்தபோது, வரலாற்றாளர் தர்மகுமார் என்னிடம், “நாம் குறை திரட்டாளர்களின் தேசமாகிவிட்டோம்” என்றார். உண்மையில் இந்தியர்களாகிய நாம் வெறுமனே குறைகளை மட்டும் மாதொருபாகன்: ஸ்537 திரட்டுவதில்லை. அவற்றைத் தெளிவாக வகைப்படுத்துகிறோம், மற்றவர்மீது சுமத்துகிறோம். சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்தின் குரல்வளையை நெரிக்கிறோம். மண்டல், அயோத்தியா போராட்டங்களுக்குப் பிறகு அடையாள அரசியலின் தாக்கம் அபரிமிதமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. இது இந்தியச் சமூகத்தைப் பல சிக்கலான வகைகளில் பாதித்திருப்பதைப் பார்க்க முடியும். அவற்றில் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணத்திற்கு, நாம் மறந்துபோன கடந்தகால அறிஞர்களை மீண்டும் மையத்திற்கு கொண்டு வந்திருப்பதைச் சொல்லலாம். ஆனாலும் அடையாள அரசியல் பொதுவாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு சாதியிலும், ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள முக்கியப்புள்ளிகள் கறைபடியாத, உன்னதமான, விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட பரிபூரணப் பெருந்தலைவர்களாக உருவெடுத்திருக்கின்றனர். 1988இல் சல்மான் ருஷ்டியின் நாவல் ஜிலீமீ ஷிணீtணீஸீவீநீ க்ஷிமீக்ஷீsமீs தடைசெய்யப்பட்டது இவ்வகையில் மிக முக்கியமான நிகழ்வு. அந்நூலைக் கண்ணால் பார்த்தேயிராத கையில் கிடைத்திருந்தாலும் ஒருபோதும் படித்திருக்கமாட்டாத மதகுருமார்கள் தெருவில் இறங்கிப் போராட்டங்களைத் தூண்டியதும், மிரண்டுபோன மத்திய அரசு அந்நூலைத் தடைசெய்தது. பிரதம மந்திரி ராஜீவ் காந்தி தன்னை ஒரு நவீனத்துவவாதி என்று சொல்லிக்கொள்பவர்தான். ஆனாலும் அவர் பலவீனமானவர். தவறான அறிவுரை களுக்குக் கட்டுப்படுகிறவர். ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் அச்சமயத்தில் நெருங்கிக் கொண்டிருந்தது. (அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் இருந்த, இருக்கப் போகிற) பல காங்கிரஸ் தலைவர்களைப் போலவே ராஜீவைச் சுற்றியிருந்த ஆலோசகர்களும் மதகுருமார் களைப் பற்றிய மிகையான அபிப்பிராயத்தில் இருந்தனர். சாதாரண இந்திய முஸ்லிம் வாக்காளர்கள் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை என்ற எளிய உண்மையைக்கூடக் காங்கிரஸ் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்திய ஜனநாயகம் ஈட்டியிருந்த நற்பெயரைக் குலைக்கும் வகையில், இரானையும் முந்திக்கொண்டு இந்திய அரசு அந்நாவலைத் தடை செய்தது. இந்நடவடிக்கை கொந்தளிப்பான சூழலை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாகப் பல்வேறு பிரிவுகளையும் மதங்களையும் சேர்ந்த தலைவர்களும் மதவெறியர்களும் தமது திருஉருக்கள் மீது வைக்கப்பட்ட எந்தவொரு விமரிசனத்துக்கும், அது மேம்போக்கானதாக இருந்தாலும் சரி, ஆய்வுரீதியாக அமைந்திருந்தாலும் சரி, அதற்கெதிராகப் பொங்கியெழுவதற்கான துணிச்சலை அளித்தது. ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி தில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் எழுப்பிய சில விமரிசனங்களுக்காக அவர் மேற்கு வங்க சட்டசபையில் கண்டிக்கப்பட்டார். மற்றொரு தில்லி எழுத்தாளர் அம்பேத்கரைப் பற்றி ஒரு விமரிசன நூலை எழுதியதற்காகத் தாக்கப்பட்டார். சிவாஜியின் பூர்வோத்திரம் குறித்து ஏற்கெனவே பேசப்பட்டு வந்த சில கருத்துக்களை (ஆதரித்து அல்ல, வெறுமனே) பதிவு செய்ததற்காக அமெரிக்க அறிஞர் ஜேம்ஸ் லெய்ன் தாக்கப்பட்டார். அவரது நூல் தடைசெய்யப்பட்டது. வீதியில் குவித்து எரிக்கப்பட்டது. அவரைத் திரும்பவும் இந்தியாவுக்கு வர இயலாமல் தடுத்தது. இன்றைய இந்தியாவில், நாமெல்லோரும் நமது நாயகர்கள் அதிபரிசுத்தமானவர்கள் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரியென்று எனக்குத் தெரியவில்லை. யுதிஷ்டிரனும் ராமனும் பல்வேறு வஞ்சக, சூதுச் செயல்களில் ஈடுபட்டுத் தவறிழைத்திருக்கின்றனர். நமது முன்னோர்கள் இவற்றிற்காக வியப்போ, கோபமோ அடையாமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்று சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி இலேசான விமரிசினத்தைக்கூட எழுப்ப முடியாது. வங்காளிகள் வெறிகொண்டெழுவார்கள். அதைப்போலவே பெரியாரைப் பற்றி தமிழர்களும், சிவாஜியைப்பற்றி மராத்தியர்களும், அம்பேத்கரைப்பற்றி தலித்துகளும், சாவர்க்கரைப் பற்றி இந்துத்துவவாதிகளும் மெலிதான விமரிசனங்களைக்கூடத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள். போஸ், சாவர்க்கர், பெரியார், அம்பேத்கர், சிவாஜி போன்றவர்கள் பெரும் தலைவர்கள்தாம். அவர்களை முழுமையாக அறிந்துகொள்ள அவர்களைப் பற்றிய நூல்கள், திரைப்படங்கள், நாடகங்கள் நிறைய வெளிவந்தாக வேண்டும். ஆனால் இத்தலைவர்களைப் பற்றியும், அவர்களது சாதனைகளையும் தோல்விகளையும், அவர்தம் துணிவையும் முரண்பாடுகளையும் பாரபட் சங்களையும் அச்சமின்றி எழுதக்கூடிய எழுத்தாளர்களும் அறிஞர்களும் நாடகாசிரியர்களும் யாராவது இருக்கிறார்களா? கடந்த ஆயிரம் வருடங்களில் (அல்லது அதற்கும் அதிகமான வருடங்களில்) வாழ்ந்த மகத்தான இந்தியர்களில், மகத்தான அல்லது சர்ச்சைக்குரிய இந்தியர்களில் காந்தியைப் பற்றி மட்டும்தான் யாரும், எதைப்பற்றி வேண்டுமானாலும் எவ்வித அச்சமோ, எதிர்ப்போ இன்றி எழுதலாம் என்பது இன்றைய விநோதம். போஸ், அம்பேத்கர், சிவாஜி, பெரியாரைப்போல காந்தி மாதொருபாகன்: ஸ்539 எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்கும் சொந்தமானவரல்ல. எல்லோருக்கும் உரித்தானவர் அல்லது ஒருவருக்கும் உரித்தானவர் அல்ல என்றும் கருதலாம். அவரை விமரிசிப்பவர்களின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் வராது. அவ்விமரிசன நூல்களுக்குத் தடை விதிக்கப்படாது. காந்தியைக் காப்பாற்றும் கோபமான, வெறிகொண்ட, பாதுகாப்பற்ற, மென்னுணர்வற்ற பாதுகாவலர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. விமரிசனங்களிலிருந்து காந்தியைப் ‘பாதுகாக்க’ நினைப்பவர்கள்கூடத் தோற்றுப்போகிறார்கள். 2011இல் அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் லெலிவெல்ட் காந்தியைப் பற்றி எழுதிய நூலில், தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி ஓரினப் புணர்ச்சியாளராக இருந்ததாக ஒரு ஊகத் தகவலை எழுதியிருந்தார். தேசிய அளவில் தனக்கு மேடையமைத்துக் கொண்டிருந்த அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன்னை மகாத்மாவின் பாதுகாவலராகக் காட்டிக்கொள்ளும் உத்தேசத்துடன் குஜராத் மாநிலத்தில் அந்நூலைத் தடைசெய்தார். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும் இதனை அடியொற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தேசிய அளவில் தடையை விரிவு படுத்த யோசித்தது. ஆனால் காந்தியின் பேரன்களான வாழ்க்கை வரலாற்றா சிரியர் ராஜ்மோகனும், இந்தியத்தூதரான கோபால கிருஷ்ணாவும் இடையிட்டுத் தடையுத்தரவு வராமல் பார்த்துக்கொண்டனர் (குஜராத்தைத் தவிர). தடை என்பது காந்தியின் கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் வாதிட்டனர். காந்தி எப்போதுமே விவாதங்களை வரவேற்பவர் என்றும், இந்தியாவின் ஜனநாயக நன்மதிப்பைக் குலைக்கும்படியாக அரசு செயல்படக்கூடாது என்றும் விளக்கினர். ஆனால் இத்தகைய கொள்கைரீதியான பிடிப்பு இந்திய வரலற்றின் பிற முக்கியத் தலைவர்களின் நேரடி வாரிசுகளுக்கும், சீடர்களுக்கும் (அல்லது அவர்களுடைய காவல் தெய்வங்களுக்கும்) இல்லை என்பதுதான் துயரம். பலவித மதங்களையும், வகுப்புவாத வன்முறை வரலாற்றையும் கொண்டுள்ள ஒரு சமூகத்தில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் திரு உருக்களைச் சித்திரிப்பதிலும் விமரிசிப்பதிலும் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம். ஆனால் வாழ்ந்து மறைந்த உண்மையான வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்களுடைய எச்சங்களைப் பற்றியும் விரிவாக, ஆழமாக ஆராய்ந்து அச்சமின்றி எழுத முடியாமல் இருப்பது நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தக்கு உகந்ததல்ல. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கருத்துச்சுதந்திரம் என்பதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்துக்குத் திரும்பச் செல்வோம். பிரிட்டிஷ் அரசு தனது நூல்களில் ஒன்றைத் தடை செய்தபோது காந்தி சொன்னதைச் சற்றே வாக்கிய அமைப்பை மாற்றி இவ்வாறு எழுதியிருந்தேன்: “எந்தவொரு சுயமரியாதையுள்ள ஜனநாயக நாட்டிலும், ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தனக்குச் சரியென்று தோன்றுகிற கருத்தைக் கொண்டிருக்கவும், அதனை செயற்படுத்தவும் உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தும் முறையில் அவனோ, அவளோ, யாருக்கெதிராகவும் வன்முறையைப் பயன்படுத்தவோ, தூண்டவோ கூடாது.” இந்த அளவுகோலின்படி பார்த்தால் இந்திய ஜனநாயகம் சோதனையில் தோற்கிறது. இந்திய நீதிமன்றங்களும் இந்திய அரசாங்கமும் தாமாகவோ கிளர்ச்சியாளர்கள் தரும் அழுத்தத்தாலோ, புத்தகங்களை, திரைப்படங்களை, கலைப்படைப்புகளை அவை வன்முறையைத் தூண்டாமல், ஆதரிக்காமல் இருந்தாலும் தடை விதிப்பதில் தயக்கமே காட்டுவதில்லை. இந்த நூல்களும் படைப்புகளும் சிலரை வருத்தமுறச் செய்திருக்கலாம். அவ்வளவுதான். ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில், உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு புத்தகத்துக்குத் தரக்கூடிய பதில் அதற்கெதிரான வாதங்களோடு இன்னொரு புத்தகமாகத்தான் இருக்க முடியும். உங்களுக்குப் பிடிக்காத கருவைக் கொண்டுள்ள, உள்நோக்கம் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கும் திரைப்படத்துக்குத் தரக்கூடிய பதிலடி அதைப் பார்க்காமல் ஒதுக்குவதுதான். ஒரு முதிர்ச்சியுற்ற ஜனநாயகத்திலிருந்து எவ்வளவு தூரம் நாம் விலகியிருக்கிறோமென்றால், கலைப்படைப்புகளைக் கும்பல் கும்பலாகச் சென்று அடித்து நொறுக்குவது, சேதப்படுத்துவது; அதைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட அரசோ நீதிமன்றமோ அப்படைப்புக்குத் தடைவிதிப்பது. இவ்வாறாகக் கருத்துச் சுதந்திரம் பற்றிய நமது விளக்கம் தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தியாவில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் வன்முறையைத் தூண்டிவிடாமலும், ஆதரிக்காமலும் இருந்தால்கூட, வன்முறையைக் கொண்டு அவனுடைய, அவளுடைய குரலை நம்மால் அடக்கிவிட முடிகிறது. இந்தியர்கள் மென்மேலும் சகிப்புத்தன்மையற்றவர்களாக, எ டு த் த ª த ற் ª க ல் ல £ ம் பு ண் ப டு ப வ ர் க ள £ க , தொட்டாற்சிணுங்கிகளாக, மாறி வருகிறார்கள். நகைச்சுவை உணர்வையும் வேகமாக இழந்து வருகிறார்கள் என்பேன். மதநிந்தனை என்ற அம்சமே புராதன மதமான இந்துமதத்தில் இருந்ததில்லை. பிற்பாடு தோன்றிய இஸ்லாமிய, கிறிஸ்துவ மாதொருபாகன்: ஸ்541 மதங்களைப் போல, தெய்வ உருக்களை அவமதித்தால், கிண்டல் செய்தால் ஒருவர் மதவிரோதி என்று விலக்கி வைக்கப்படுவதில்லை. ஆனால் அது இப்போது மாறியிருக்கிறது. இந்துக்கள் இவ்விஷயத்திலும் முஸ்லிம்களைப் போல், கிறித்துவர்களைப்போல் மாறிவிட்டார்கள். அதேபோல சீக்கியர்களும் சமணர்களும்கூட. நகைச்சுவையுணர்வை இழந்துவிட்டிருக்கும் நமது காலகட்டத்தில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது ஒரு அங்கத எழுத்தாளரை. பம்பாயைச் சேர்ந்த பார்ஸி இனத்தவரான அவரது பெயர் பெஹ்ராம் கான்ட்ராக்டர். ‘ஙிusஹ் தீமீமீ’ என்ற புனை பெயரில் எழுதுவார். முதலில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் பிறகு மிட்டேவிலும் எழுதிவந்த அவர் கடைசியாக கியீtமீக்ஷீஸீஷீஷீஸீ ஞிவீsஜீணீtநீலீ ணீஸீபீ சிஷீuக்ஷீவீமீக்ஷீ-இல் எழுதினார். அவர் மரணத்துக்குப்பிறகு அவருடைய மனைவி ஃபர்ஸானா கணவரின் பத்தி எழுத்துக்களை தொகுத்து நூலாக்கினார். அவற்றை அடிக்கடி எடுத்து படித்துக் கொண்டிருப்பேன். ‘பிஸி பீ’ ஒரு மகத்தான அங்கத எழுத்தாளர். வாழ்க்கையை, உலகத்தை, தனது சக பார்ஸிகளை என யாரையும் எதையும் விட்டுவைக்காமல் ஆரோக்கியமாகக் கிண்டல் செய்யும் எழுத்து அவருடையது. இந்தியர்களில் தங்களையே கிண்டல் செய்துகொண்டு சிரிக்கின்ற ஒரே இனம் பார்ஸிகள் மட்டுமே என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு சுவையான கதையை ஃபரூக் தோண்டி என்ற புனாவைச் சேர்ந்த பார்ஸி எழுத்தாளர் சொன்னார். அவர் அக்கதையைப் பாகிஸ்தானைச் சேர்ந்த பார்ஸி எழுத்தாளரான பாப்ஸி சித்வாவிடமிருந்து கேட்டாராம். “பார்ஸிகள் இனம் வேகமாக அழிந்து வருகிறது. மிகக் கொஞ்சம் பேர்தான் எஞ்சி இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அதிகமாக பிள்ளை பெற்றுக்கொண்டு உங்கள் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடாது?” என்று யாரோ கேட்டிருக்கிறார். பாப்ஸி சித்வா சொன்னாராம், “தப்பு பார்ஸி ஆண்களிடம் தான் இருக்கிறது. எங்கள் ஆண்களில் பாதிப்பேர் ஹோமோசெக்ஸுவலாக இருக்கிறார்கள், பாதிபேர் பம்பாயில் சிலையாக இருக்கிறார்கள்!” ஒரு தமிழனாக, ஓர் இந்துவாக என்னால் தமிழர்களைப் பற்றியோ, இந்துக்களைப் பற்றியோ இதில் பாதியளவு கிண்டலாக ஒரு துணுக்கைச் சொல்லிவிட முடியுமா? அப்படிச் சொன்னால் என் சமுதாயத்தையே இழிவுபடுத்தியவனாக ஆகிவிடமாட்டேனா? நான் சொல்லமாட்டேன் என்று தான் நினைக்கிறேன். நகைச்சுவையுணர்வு அற்ற நிலை என்பதன் மறுபக்கம் அதிகரித்து வரும் அடையாள அரசியல். நகைச்சுவை இல்லாமல் மகத்தான இலக்கியம் உருவாகாது. கருத்துச் சுதந்திரத்திற்கு இந்தியாவில் இருக்கும் நான்காவது அச்சுறுத்தல் காவல்துறையின் நடத்தை. நீதிமன்றங்கள் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களும் ஆதரவான நிலை எடுக்கும்போதுகூட, காவல்துறை அவர்களைத் தொல்லைக்குள்ளாக்கும் குண்டர் படைக்கு ஆதரவாகவே காவல்துறை நிற்கிறது. ஜேம்ஸ் லெய்ன் சிவாஜியைப் பற்றி எழுதிய ஆய்வு நூல், சிவாஜியைப் பற்றி மக்களிடையே காலம்காலமாக நிலவிவரும் பொதுக்கருத்துக்கு மாறாக உள்ளது என்ற காரணத்தைக்காட்டி மகாராஷ்டிர அரசு தடை செய்தது. மும்பை உயர்நீதிமன்றம் அத்தடையை ரத்து செய்தது. அந்நூலின் பதிப்பாளர் மகாராஷ்டிரா காவல்துறையிடம் தனக்குப் பாதுகாப்பு வழங்கிடக் கோரியபோது, காவல்துறை மறுத்தது. அகமதாபாத்தில் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர் பால்கிருஷ்ண தோஷியும் மகத்தான ஓவியர் எம்.எஃப். ஹுசைனும் இணைநது ‘ஹுசைன் தோஷி குஃபா’ என்றொரு கலைநிகழ்வை நடத்தியபோது குஜராத் காவல்துறை வேடிக்கை பார்க்க பஜ்ரங் தள் ரெளடிகள் அடித்து நொறுக்கினர். இத்தகைய உதாரணங்களை வளர்த்துக்கொண்டே போகலாம். பொதுவாக, இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான போரில் கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எதிராக குண்டர்கள் அணிவகுத்து நிற்கும்போது, போலீசார் யார் பக்கத்தில் சேர்ந்துகொள்வார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஐந்தாவது அச்சுறுத்தல் அரசியல்வாதிகளின் கோழைத்தனம்; பெரும்பாலான நேரங்களில் அவர்களது பொய்மை. போக்கிரிகளாலும் மதவெறியர்களாலும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் அச்சுறுத்தப்படும்போது அவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு பெரிய இந்திய அரசியல்வாதியும் (சிறிய அரசியல்வாதிகளும்கூட) எந்தவொரு பெரிய அல்லது சிறிய இந்திய அரசியல் கட்சியும் துணை நிற்பதில்லை. அயதுல்லா கொமேனி ருஷ்டிக்கு எதிராக ஃபத்வா அறிவிப்பதற்கு முன்பாகவே ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசு ‘ஷிணீtணீஸீவீநீ க்ஷிமீக்ஷீsமீs’ நாவலுக்குத் தடை விதித்ததை முன்பே பார்த்தோம். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் முதலமைச்சர்களான ஜோதி பாசுவும் புத்ததேவ் பட்டாச்சாரியாவும் தஸ்லிமா நஸ்ரீனின் நாவல்களைத் தடை செய்திருக்கின்றனர். பின்னவர் அந்த நாவலாசிரியையை மாநிலத்தை விட்டே வெளியேற்றிய பணியையும் செய்துமுடித்தார். இவ்விஷயத்தில் பாரதிய ஜனதாவின் பங்களிப்பைக் குறைத்து மாதொருபாகன்: ஸ்543 மதிப்பிட முடியாது. ஹுசைன் தோஷி குஃதா கலையழிப்புப் பணி நடந்தேறியபோது குஜராத்தின் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. அவர் அப்பதவியில் இருந்த காலத்தில் பரோடாவில் உள்ள மகாராஜி சாயியாயி பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் மகத்தான கலைஞர்கள் பயின்ற அல்லது பயிற்றுவித்த நாட்டின் மிகச்சிறந்த நுண்கலைத் துறையை இந்துத்துவா செயல்வீரர்கள் அழித்து நாசமாக்கினர். மாநிலக் கட்சித் தலைவர்களின் பக்கம் நமது கவனத்தைத் திருப்புவோம். தமிழ்நாட்டில் ஒரு சாதி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நாவலாசிரியர் பெருமாள் முருகனை அச்சுறுத்தி, எழுத்தையே துறக்கும் அளவிற்குத் தள்ளியபோதும் அவரைக் காப்பாற்ற ஜெயலலிதாவோ, மு. கருணாநிதியோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த அரசியல்வாதிகள் இப்படி செயலாற்றுவதற்குப் (அல்லது செயலாற்றாமல் இருப்பதற்கு) பெரும்பாலும் தேர்தல் கட்டாயங்கள்தான் காரணமாக இருக்கிறது. எந்தவொரு சாதியையும் புண்படுத்தினாலோ அல்லது புண்படுத்துவதுபோல நடந்து கொண்டாலோ அடுத்த தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் கிடைக்காது என்ற அச்சம். எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தாக்குகின்ற நாசக்காரர்களின் சாதி ஆதரவை எப்போதும் மிகைப்படுத்தி கற்பனை செய்துகொள்வதே அரசியல்வாதிகளின் வழக்கம். அரசியல்வாதிகளுக்குக் கலை இலக்கிய சுதந்திரத்தின்பால் கிஞ்சித்தும் ஆர்வம் இல்லாததால், சொற்ப அளவிலான வாக்கு வங்கியைக்கூட இழந்துவிட அவர்கள் தயாராக இருப்பதில்லை. 2006ஆம் வருடம் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இந்துத்துவா தீவிரவாதிகளால் எம்.எஃப். ஹுசைனுக் கெதிராக நீதிமன்றங்களில் வரிசையாக வழக்குகள் தொடரப்பட்டு, அவர் நாட்டை விட்டே வெளியேற வந்தது. 2009இலும் அதன் பிறகு 2010லும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஹுசைனுக்கு பாரத ரத்னா விருதும் சல்மான் ருஷ்டிக்கு (அவர் இந்தியாவுக்கு உரையாற்ற வருவது முல்லாக்களை புண்படுத்தும் என்பதால் அவர் பிறந்த நாட்டுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தார்) பத்ம விபூஷண் விருதும் வழங்கப்படலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இவ்விருவரின் கலைத்துறை சாதனைகளுக்கு இவ்விருதுகள் பொருத்தமான அங்கீகாரமாக இருந்திருக்கும். அதே நேரத்தில் இந்து, முஸ்லிம் மதவெறியர்களை ஒரே நேரத்தில் ஒடுக்குவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். கருத்துச் சுதந்திரத்திற்கு இந்தியா அளிக்கும் மதிப்பும் உலகிற்கு புலப்பட்டிருக்கும். மேலும் இவ்விருதுகளை வழங்கினால் யார் எதிர்த் திருக்கப் போகிறார்கள்? டாக்டர் மன்மோகன்சிங் இப்பரிந்துரைகளின் நியாயத்தை உணர்ந்திருந்தா ரென்றாலும், வழக்கம் போல அவற்றை நிறை வேற்றும் தைரியம் இல்லாமல் ஒதுக்கி வைத்தார். 2011இல் ஹூசைன் கத்தார் நாட்டில் இறந்துபோனார். நமது நாட்டின் மகத்தான ஓவியர் ஒருவர், அன்றைய அரசு பாதுகாப்பு தர மறுத்ததால் தான் பெரிதும் நேசிக்கும் தாய்நாட்டிலிருந்து வெளியேறி ஏதோவொரு நாட்டில் மரித்துப் போன அவமானகரமான அத்தியாயம் ஒன்று நமது குடியரசின் சரித்திரத்தில் முடிவுக்கு வந்தது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்தக் கொள்கையை வரித்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும், இந்திய அரசியல்வாதிகள் எப்போதுமே மதவெறியர்களுக்கு முன்பு பணிந்துவிடுகின்றனர். சில நேரங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பத்திரிகையாசிரியர்களையும் செய்தியாளர்களையும் மிரட்டவும் செய்கின்றனர். நமது சட்டங்களில் உள்ள திறம்பியங்களும் முறைகேடுகளும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் தொழிலதிபர்கள் ஊடக நிறுவனங்களையும் நடத்த அனுமதிக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை அரசியல்வாதிகள் நெரிப்பதற்குப் பின்னணியில் இருப்பது பெரும்பாலும் இந்த பெருவணிகர்களின் தொடர்புகள்தாம். ஒரு குறிப்பிட்ட நாளேடு அரசியல்வாதி ஒருவரைப் பற்றியோ அல்லது அவரது கட்சியைப்பற்றியோ கடுமையான விமரிசனக் கட்டுகரைகளை வெளியிட்டு வருவதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பத்திரிகையின் உரிமையாளருக்கு ஒரு ரசாயன தொழிற்சாலையோ அல்லது எஃகுத் தொழிற்சாலையோ இருக்கும். உடனே தொழில்துறை அமைச்சர் அவரைத் தொலைபேசியில் அழைத்து அவரது தொழிற்சாலைகளின் உரிமங்கள் புதுப்பிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறுவார். இத்தகைய அச்சுறுத்தல்கள் இதைப்போல எப்போதுமே நாசூக்காக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு இருக்கும் பெரிய தடைக்கல் இது. ஆறாவது அச்சுறுத்தல் ஐந்தாவதோடு தொடர்புள்ளது. அரசு விளம்பரங்களை ஊடங்கள் சார்ந்திருப்பது குறித்தது அது. மாநில, வட்டார இதழ்களில் இதன் தாக்கம் மிகவும் அதிகம். உதாரணமாக தார்வாடிலிருந்து வெளியாகும் ஒரு கன்னட நாளேட்டின் வருவாய் அரசு அளிக்கும் ஒப்பந்தப் புள்ளி, வேலை வாய்ப்பு, பல்வேறு துறை சார்ந்த மற்றும் வளர்ச்சித் திட்ட விளம்பரங்களையே பெரிதும் சார்ந்திருக்கிறது என்பதால் மாதொருபாகன்: ஸ்545 மாநில அரசின் தோல்விகளை அச்சமின்றி விமரிசிக்க அதனால் முடிவதில்லை. ‘தேசிய’ ஊடகங்களின் பார்வையிலிருந்து விலகி நாட்டின் மூலை முடுக்குகளில் இயங்கும் பத்திரிகைகளுக்கும் செய்தியாளர்களுக்கும் வருகின்ற அச்சுறுத்தல்கள் உக்கிரமானவை. 1988இல் கர்வாலில் நான் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது உமேஷ் டோபால் என்ற துணிச்சலான உள்ளுர் நிருபர் சாராய அதிபர்களின் குண்டர் படையால் கொல்லப்பட்டார். கொலையாளிகளுக்கு ஆளும் கட்சியோடு இருந்த நெருக்கமான உறவு அந்தக் கொலையைப் பற்றிய விசாரணையைத் தடுத்து நிறுத்தியது. சமீபத்தில் சட்டீஸ்கரின் பாஸ்தர் பகுதியில் மாநில அரசு சில செய்தியாளர்களைக் கைதுசெய்து, சிலரை அப்பகுதியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. காரணம் அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில அரசின் ஆதரவோடு அவர்களுக்கெதிராகப் போராடும் தனியார் படையினருக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரின் இருண்ட பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டி வந்ததே. கர்வாலும் பாஸ்தரும் பல வருடங்களாக நான் ஆர்வத்தோடு கவனித்து வரும் பகுதிகள். இதைப்போன்ற தாக்குதல்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் நடப்பவைதான். சமீபத்தில் வெளியான ‘சர்வதேச பத்திரிகைச் சுதந்திர தரவரிசைப் பட்டியலில் 180 நாடுகளில் இந்தியா 133வது இடத்தைப் பெற்றிருந்தது. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ரஷியாவை விட உயர்ந்த இடத்தில் இருப்பது ஒன்றும் பெரிய ஆறுதல் அல்ல. ஆனால் நேபாளத்தைவிட நாம் கீழே இருக்கிறோம். மாநில மத்திய அரசும், அரசியல் கட்சிகளும் சுதந்திரமாகச் செயல்படும் செய்தியாளர்களைக் கட்டாயப்படுத்தி, அடக்கியொடுக்கி, தடுப்பதுபோலவே தனியார் துறையும் ஊடகத்துறையை கட்டுப்படுத்துகிறது. ஆயுத பலத்தால் அல்ல, திரவிய பலத்தால். எனவே கருத்துச் சுதந்திரம் எதிர்நோக்கும் ஏழாவது அச்சுறுத்தல் ஊடகத்துறை வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைச் சார்ந்திருப்பதோடு தொடர்பு கொண்டிருப்பது. குறிப்பாக வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தினருக்குச் செய்திகள் வழங்கும் ஆங்கில நாளேடுகளுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் இது பொருந்தும். அபாயகரமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் பொருட்களை இவர்கள் அரிதாகவே விமரிசிப்பார்கள். விளம்பரம் நின்றுவிடும் என்ற அச்சம். பல முன்னணி நிறுவனங்கள் தமது கம்பெனிகளை விமரிசித்து எழுதியதற்காக அப்பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சி சேனல்களுக்கும் விளம்பரங்களை நிறுத்தியிருக்கின்றன (டாடாவும் இதில் அடக்கம்). சூழல்சார் இதழியல் (ணிஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீtணீறீ யிஷீuக்ஷீஸீணீறீவீsனீ) எனக்கு விருப்பமான துறை. இந்த ஊடகப்பிரிவில்தான் சுயதணிக்கை முறை பரவலாகச் செயல்படுகிறது. ரசாயனத் தொழிற்சாலைகள், காகித ஆலைகள், சுரங்க நிறுவனங்கள், வாகனத் தொழிற்சாலைகள் போன்றவை சுற்றுச்சூழல் மாசடைவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை எல்லாமே நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் அதிக அளவில் விளம்பரங்கள் தருகின்ற நிறுவனங்கள். இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்கள் சூழலை மாசுபடுத்துவது குறித்து ஆதாரத்தோடு செய்தி அளித்தால், ஊடக உரிமையாளர்களும், சில நேரங்களில் ஆசிரியர்களும்கூட, அச்செய்தியை வெளியிடமாட்டார்கள் அல்லது அடக்கி வாசிப்பார்கள். 1980களில் எல்லா முக்கிய இந்தியச் செய்தி நாளேடுகளிலும் சூழலியல் செய்தியாளர் என்று ஒருவர் இருப்பார். இப்போது நுகர்வோர் ஆதிக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்த சூழலியல் இதழாளர்கள் எல்லாருமே வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் அல்லது உப்புச் சப்பற்ற வேறு சாதுவான துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். விளம்பரதாரர்களிடமிருந்து பெறும் வருவாய் இல்லாமல் பத்திரிகைகள் இயங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். கம்யூனிஸ்ட் நாடுகள் அளவுக்கு வேறெங்கும் கருத்துச் சுதந்திரமற்ற நிலை இல்லை எனலாம். சோவியத் யூனியனில் இரண்டு முக்கிய நாளேடுகள் இருந்தன. ப்ராவ்தா, இஸ்வெஸ்டியா. (இந்த ரஷியப் பெயர்களின் பொருள் முறையே ‘உண்மை’, ‘செய்தி’). ஆனால் ‘ப்ராவ்தா’வில் ‘இஸ்வெஸ்டியா’ இருக்காது என்றும் ‘இஸ்வெஸ்டியா’வில் ‘ப்ராவ்தா’ இருக்காது என்றும் சொல்வார்கள். மேற்கு ஐரோப்பாவிலோ, ஐக்கிய அமெரிக்காவிலோ நம் நாட்டில் உள்ளதைப்போல விளம்பரச் சந்தையில் ஒன்றிரண்டு மாபெரும் தொழில் நிறுவனங்களே பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பதில்லை. நம் நாட்டில் பத்திரிகை உரிமையாளர்களிடமும், ஆசிரியர்களிடமும் இந்தப் பெரும் தொழிலதிபர்கள் அளவுக்கு மீறிய அழுத்தத்தைக் கொடுப்பதைப் போல உலகில் வேறெங்கும் நடப்பதில்லை. வர்த்தக நோக்கங்கள் எப்படி இந்தியாவில் ஊடக நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது என்று கவனித்தால் எழுத்தாளர்கள் கலைஞர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களில் தொலைக்காட்சி சேனல்களுக்கும் ரகசிய மாதொருபாகன்: ஸ்547 உடந்தைமை இருப்பது தெரியவரும். செய்தியாளர் ஒருவரின் வீட்டின் மீதோ ஓர் ஓவியக்கூடத்தின் மீதோ அவர்களால் ‘புண்பட்ட’ போக்கிரிகள் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்ற செய்தி சில தொலைக்காட்சி சேனல்களுக்குக் கிடைத்தால், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ‘எக்ஸ்க்ளூஸிவ்’, ‘லைவ்’ கவரேஜ்களுக்காகக் காமிரா சகிதம் இவர்கள் முதலிலேயே தலத்தை அடைந்துவிடுவார்கள். பல சட்டவிரோதமான தாக்குதல்கள் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ‘நேரடியாக’ ஒளிபரப்பாவது இப்படித்தான். கருத்துச் சுதந்திரத்திற்கு இந்தியாவில் இருப்பதாக நான் கருதும் அச்சுறுத்தல்களில் எட்டாவதும் கடைசியுமான அச்சுறுத்தல் தன்முன்னேற்றத்தில் மட்டுமே நாட்டமாக உள்ள எழுத்தாளர்களிடமிருந்தும், கொள்கைவாத எழுத்தாளர்களிமிருந்தும் வருவது. “எழுத்தாளன் எந்தவொரு அரசியல் கட்சியிலும் விசுவாசமான உறுப்பினராக இருக்கக்கூடாது” என்றார் ஜார்ஜ் ஆர்வெல். என்னுடைய கருத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் இயக்குநர்களும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் விசுவாசமற்ற உறுப்பினராகக்கூட இருக்கக்கூடாது என்பதுதான். கட்சிகளின் அதிகாரபூர்வ, அதிகார பூர்வமற்ற தொடர்புகளிலிருந்து அவர்கள் விலகியே இருக்க வேண்டும். எழுத்தாளர்கள் பலருக்கும் அரசியல் சமூகம் குறித்து வலுவான அபிப்பிராயங்கள் இருப்பது உண்மையே. அதனால்தான் நாம் எழுதுகிறோம், அதனால்தான் நாம் ஓவியம் தீட்டுகிறோம். அதனால்தான் நாம் திரைப்படம் எடுக்கிறோம், அதனால்தான் நாம் நாடகம் எழுதுகிறோம். ஆனால் படைப்பூக்கம் உள்ள எந்தவொரு கலைஞனும் தனது சுதந்திரத்தை, தனது மனசாட்சியை ஒரு அரசியல் கட்சியிடம் அடகு வைக்கமாட்டான். துரதிருஷ்டவசமாக இந்திய எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் பலர் ஏதோவொரு கட்சியுடனோ அல்லது தனிப்பட்ட ஒரு அரசியல் வாதியுடனோ நெருக்கமான உறவை வைத்திருக்கிறார்கள். இந்தத் தொடர்பு பல உண்மைகளை மறைக்கவும், கருத்துக்களைத் திரித்து எழுதவும் பயன்படுகிறது. இத்தகைய துரோகம் (கடுமையான சொற்பிரயோகம்தான், ஆனால் பொருத்தமானது) பத்திரிகைத் துறை முழுக்கவும் காணப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சிக்காகப் பிரச்சாரம் செய்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயலாற்றும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் உண்டு. அதேபோல சிபிஐ (எம்) கட்சிக்குச் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் உண்டு. மாவோயிஸ்டுகளுக்குக்கூட உபயோககரமான முட்டாள் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இருக்கிறார்கள். கொள்கை ரீதியான ஒரு சார்பினால் சில நேரங்களில் உண்மை மறைக்கப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு உண்மையைச் சொல்வதைவிட அவர்களுடைய கட்சியின் நலன் முக்கியமாகிப் போய்விடுகிறது. சில நேரங்களில் லஞ்சம் உண்மையை மறைக்கிறது. எழுத்தாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் வீட்டுமனையோ, ராஜ்யசபா பதவியோ, வசதியான அரசு குடியிருப்புகளோ, வெளிநாட்டுத் தூதர் பதவிகளோ வழங்கப்படும்போது உண்மைகள் புதைந்து போகின்றன. கட்சி அபிமானம் பல நேரங்களில் கலைஞர்களைச் சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் ஒதுங்கிச் செல்லவும், சிலவற்றிற்கு பொங்கிச்சீறவும் வைக்கிறது. இடதுசாரி அமைப்பான ஷிகிபிவிகிஜி, எம்.எஃப். ஹூசைனுக்கு ஆதரவாகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி அரசு தஸ்லிமா நஸ்ரீனை நடத்திய விதத்திற்கு குரலெழுப்பாமல் அமைதி காத்தது. இந்திய மார்க்ஸிஸ்டுகள் நமது நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக பெருங்குரலெடுத்து பேசுவார்களேயொழிய, சீனாவிலும் கியூபாவிலும் மிருகத்தனமாக கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதை எதிர்த்து வாயைத் திறக்க மாட்டார்கள். அவர்களுக்கு எதிர்தரப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியினரின் நடவடிக்கைகளைப் பார்த்தால், முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியிருப்பதனால் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவான நிலையை எடுப்பார்கள். ஆனால் இந்துத்துவா வெறியர்களால் எழுத்தாளர்கள் திரைப்பட இயக்குநர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு வேறு பெயரிட்டு நியாயப்படுத்துவார்கள் அல்லது பொருட்படுத்தாமலிருப்பார்கள். மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உள்ளதைப்போல இந்தியாவில் எழுத்தாளர்கள் கலைஞர்களின் உரிமைக்களுக்காக, சுதந்திரத்திற்காக துணை நிற்கக்கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் இல்லை. இங்கு நிலைமை மோசமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவும், எடிட்டர்ஸ் கில்டும் எந்த அதிகாரமும் அற்ற வெற்று அமைப்புகள். றிணிழி அமைப்பில் இந்தியாவுக்கென்று இடமே கிடையாது. திரைப்படத் தணிக்கையின் செயற்பாடுகளை எதிர்ப்பதற்கு இங்கே திரைப்பட இயக்குநர்களுக்கென்று ஒரு சங்கம்கூட இல்லை. ணீநீணீபீமீனீவீமீ யீக்ஷீணீஸீநீணீவீsமீ அல்லது பிரிட்டிஷ் அகாடெமியைப் போல அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அறிஞர்கள் கலைஞர்களுக்கு துணை நிற்பதற்காக மாதொருபாகன்: ஸ்549 ஒரு அமைப்பையும் நாம் உருவாக்கிடவில்லை. அச்சுறுத்தலுக்கு ஆளான எழுத்தாளரோ, கலைஞரோ, அறிஞரோ, திரைப்பட இயக்குநரோ, செய்தியாளரோ தனது சொந்த முயற்சியால் மட்டுமே அவருடைய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு உள்ள எட்டு அச்சுறுத்தல்களாக நான் குறிப்பிடுபவை இவை: காலத்திற்கு ஒவ்வாத பழங்கால காலனிய சட்டங்கள், சட்டத்துறையில் நிலவும் குறைபாடுகள், அடையாள அரசியலின் வளர்ச்சி, போக்கிரிகளோடு காவல்துறையின் உடந்தைமை, அரசியல்வாதிகளின் கோழைத்தனம், அரசு விளம்பரங்களை ஊடகங்கள் சார்ந்திருப்பது, வர்த்தக விளம்பரங்களை ஊடகங்கள் சார்ந்திருப்பது, இறுதியாக கொள்கைவாத, தன்னல எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள். இந்த எட்டு அச்சுறுத்தல்களும் இந்திய ஜனநாயகத்தின் அறம் சார்ந்த, நிறுவன அடித்தளங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட சர்வாதிகார நாடுகளாக உள்ள சீனா, ரஷ்யாவில் இருக்கும் கலைஞர்களைவிட நமது நாட்டின் எழுத்தாளர்களும், கலைஞர்களும், இயக்குநர்களும் அதிக கருத்து சுதந்திரத்தோடு இருக்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் பரிபூரண ஜனநாயக நாடுகளான ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளோடு ஒப்பிட முடியாதளவுக்கு மிகவும் கீழே இருக்கிறோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். 2014இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாகவும், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. ஆனால் காங்கிரஸோ, இடதுசாரிகளோ, முக்கியமாக எந்தவொரு மாநில கட்சியோ தாம் அரசாளும் மாநிலங்களில் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கலைச் சுதந்திரத்திற்கும் அறிவுச் சுதந்திரத்திற்கும் பொற்காலம் என்று இந்திய சரித்திரத்தில் எந்தவொரு காலகட்டமும் இருந்ததில்லை. நேருவும் அம்பேத்கரும் படேலின் உதவியோடு பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்களென்றால் அப்போது உண்டாகியிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இருந்தது. ஆனால் இந்திய ஒருமைப்பாடு அபாய கட்டத்தைத் தாண்டிய பிறகு, பல கட்சி ஜனநாயக அமைப்பு நிறுவப்பட்ட பிறகு, எதற்காக அந்தச் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படவில்லை? இதற்கிடையில் ஒரு காங்கிரஸ் பிரதமர் அவசர நிலையைக் கொண்டு வந்தார். இரண்டாமவர் ‘ஜிலீமீ ஷிணீtணீஸீவீநீ க்ஷிமீக்ஷீsமீs’ நாவலுக்கு தடை விதித்தார். மூன்றாமவர் நமது மகத்தான ஓவியரை அவரது சொந்த நாட்டில் பத்திரமாக வாழவும் (சாகவும்) விடவில்லை. எப்படியிருந்தாலும் பிஜேபியும் ஆர்எஸ்எஸ்ஸும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க தீவிரமாகக் களமாடியிருக்கப் போவதில்லை. ஆனாலும் காங்கிரஸின் (இடதுசாரிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்) குற்றங்கள் அவர்களுக்குத் துணிவைக் கொடுத்து அவர்கள் பங்குக்கு மேலும் குற்றங்களைப் புரிவதற்கு துணை செய்திருக்கிறது. இதைச் சொல்லும்போது இப்போது இருக்கும் நிலைமை முந்தைய காலத்தைவிட இரண்டு விதங்களில் மோசமாகத்தான் இருக்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். முதலாவதாக, தற்போது மத்தியில் உள்ள அரசுதான் இதுவரை இருந்தவற்றிலேயே மிகவும் அறிவாற்றலுக்கு எதிரான அரசு என்பது. மிஸீபீவீணீஸீ சிஷீuஸீநீவீறீ யீஷீக்ஷீ பிவீstஷீக்ஷீவீநீணீறீ ஸிமீsமீணீக்ஷீநீலீ, திவீறீனீ ணீஸீபீ ஜிமீறீமீஸ்வீsவீஷீஸீ மிஸீstவீtutமீ ஷீயீ மிஸீபீவீணீ, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்குத் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்களின் தகுதியைப் பார்க்கும்போது இந்த அரசுக்கு அறிவுத்துறை, இலக்கியம், கலை போன்ற விஷயங்களில் இருக்கும் அலட்சியம் அவமதிப்பு புலப்படும். இந்த மட்டித்தனம் இவ்வரசின் தலைமையிலிருந்து அடிமட்டம்வரை ஊறிக்கிடக்கிறது. அறிவுஜீவிகளும், எழுத்தாளர்களும், கலைஞர்கள் சமுதாயத்துக்கு பெரும் பங்களிக்கக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை பிரதமரிடமே இருப்பதாகத் தெரியவில்லை. சுதந்திரச் சிந்தனைகளின் மீது சிந்திப்பவர்கள் மீதும் இவர்களுக்கு இருக்கும் வெறுப்பு அடிவரை ஊன்றியிருக்கிறது. முன்பைவிட இப்போது நிலைமை சீர்கெட்டிருப்பதற்கு இரண்டாவது காரணம் இது. முன்பெல்லாம் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. சில இயக்குநர்களின் படங்கள் தணிக்கை வாரியத்தால் கடுமையாக வெட்டப்பட்டிருக்கின்றன. சில ஓவியர்களின் ஓவியங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போதுதான், ஒரு சுதந்திர நாட்டின் சரித்திரத்திலேயே முதல்முறையாக, தீர்க்கமாக எழுதக்கூடிய பெரிதும் மதிக்கத்தக்க எழுத்தாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்களுக்காக அழித்தொழிக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் இத்தகைய மூன்று படுகொலைகளை நாம் கண்டிருக்கிறோம். மகாராஷ்டிராவில் நரேந்திர தாபோல்கர், மகாராஷ் டிராவைச் சேர்ந்த மற்றொரு எழுத்தாளர் கோவிந்த் பன்ஸாரே, கர்நாடகாவைச் சேர்ந்த எம்.எம். கல்புர்கி. இவர்கள் அனைவருமே மாதொருபாகன்: ஸ்551 தமது தாய்மொழியில் எழுதுபவர்கள் என்பது யதேச்சையான ஒற்றுமை அல்ல. இப்போது நான் சொல்வது அபசகுனமாக ஆகிவிடக்கூடாது. ஆனால் எனக்கென்னவோ ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் ஒப்பீட்டளவில் அதிகம் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அவர்களது சர்வதேச பிரபல்யம், ஊடகங்களில் அவர்களுக்கு கிடைக்கும் வெளிச்சம் காரணமாக இருக்கலாம். மேலும் அவர்களை இந்நாட்டில் வாசிப்பது மிகக்குறைவான மேட்டுக்குடி மக்கள் மட்டுமே என்பதால், இந்த அடிப்படைவாத, தீவிரவாதிகளிடமிருந்து அதிகம் பயமுறுத்தல்கள் வருவதில்லைபோல. மேலே குறிப்பிட்ட மூன்று படுகொலைகளுக்கும் உள்ள அரசியல் பின்புலம் வெவ்வேறானவை. தாபோல்கர் கொல்லப்பட்டபோது தில்லியிலும் மகாராஷ்டிராவிலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். பன்ஸாரே படுகொலை செய்யப்பட்டபோது பிஜேபி மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் ஆட்சியில் இருந்தது, கல்புர்க்கி கொல்லப்பட்டபோது மத்தியில் பிஜேபியும் மாநிலத்தில் காங்கிரஸும் இருந்தன. ஆனால் முதுகுத்தண்டை சில்லிடவைக்கும் ஒற்றுமை இருக்கிறது. கொல்லப்பட்டதற்குக் காரணம் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கை, நாத்திகப் பேச்சு, இந்து சம்பிரதாயங்களை ஐயுறவோடு அலசிக் கூர்மையாக விமரிசித்தது. மூவரையும் கொன்றது இந்து அடிப்படைவாதிகள். நாத்திகர்களையும் மதச்சார் பற்றவர்களையும் கொன்றுவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்ட பங்களாதேஷின் பிரதிபிம்பத்தைப் போல இந்தியாவை மாற்றிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். எனது சொந்த ஊரான பெங்களூருவில் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி அவரது இறுதி வருடங்களைக் காவல்துறையின் பாதுகாப்பில் கழிக்க வேண்டியிருந்தது. இந்துமத அடிப்படைவாதத்தை அவர் விமரிசித்ததால் ஹிந்துத்துவா குண்டர்கள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். அனந்தமூர்த்தி இறுதியில் இயற்கையான காரணங்களால்தான் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணம் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் இந்துத்துவா ஆட்களால் கொண்டாடப்பட்டது. இதனை அறிவுப் பிறழ்ச்சி என்பதா, ரசக்குறைவு என்பதா, காட்டுமிராண்டித்தனம் என்பதா? பத்து வருடங்களுக்கு முன் நான் குறிப்பிட்டதைப்போல இந்தியா இன்னமும் 50-50 ஜனநாயக நாடாகத்தான் உள்ளதா? சமுதாயங்களும் தேசங்களும் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் முன்னகர்வதில்லை. ஒரு பகுதியில் முன்னேற்றம் இருக்கையில் மறுபகுதியில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும். பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட ஒப்பீட்டளவில் இளைய சமுதாயத்தினருக்கு (குறிப்பாக பெருநகரவாசிகளுக்கு) தமது வேலை, திருமண இணையர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் அதிக சுதந்திரம் கிடைத்திருக்கிறது. சாதியும் பாலின ஏற்றத்தாழ்வுகளும் இன்னமும் கணிசமாக இருந்தாலும் அவற்றை நியாயப்படுத்தும் போக்குகள் ஆதரவிழந்திருக்கின்றன. அதே நேரத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சுதந்திரம் இழந்திருக்கிறார்கள். அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் அவர்களைப் பலவீனமாக்கியிருக்கின்றன. 1975-77 நெருக்கடி காலகட்டத்திற்குப் பிறகு இத்தகைய சீரழிவு ஏற்பட்டிருப்பது இப்போதுதான் என்பதை நாம் உணர வேண்டும். (2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் நிகழ்த்திய விஜய் டெண்டுல்கர் நினைவுச் சொற்பொழிவின் கட்டுரை வடிவம்) தமிழில் ஜி. குப்புசாமி காலச்சுவடு, ஆகஸ்ட் 2016